பிருத்விராஜ் சுகுமாரனின் தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ டிரெய்லர் வெளியானது!
இந்தியத் திரையுலகின் மிகப் பெரிய சர்வைவல் அட்வென்ச்சர் படமான ‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ வரும் மார்ச் 28 ல் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.இப்படத்தில், படத்தில், ஹாலிவுட் நடிகர் ஜிம்மி ஜீன் லூயிஸ், இந்திய நடிகர்களான அமலா பால் மற்றும் கே.ஆர். கோகுல், பிரபல அரபு நடிகர்களான தலிப் அல் பலுஷி மற்றும் ரிக் அபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்
தேசிய விருது வென்ற பிளெஸ்ஸி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.பிரமிப்பைத் தூண்டும் இந்தக் கதை, நஜீப்பின் நிஜ வாழ்க்கையைத் தேடும் இன்னல்கள் நிறைந்த அவரது பயணத்தைச் சுற்றி வருகிறது. பிருத்விராஜ் சுகுமாரனின் பிரமிக்க வைக்கும் மாற்றம், பல்வேறு தோற்றங்கள், பரந்த பாலைவனத்தின் அற்புதமான காட்சிகளுடன், இந்தப் படத்தின் டிரெய்லர் நமக்கு அழகான ஒரு உலகத்தை அறிமுகப்படுத்துகிறது.
இப்படத்தின் டிரெய்லர் மற்றும் படத்தைப் பற்றி இயக்குநர் ப்ளெஸ்ஸி பேசுகையில், “என்னைப் பொருத்தவரை இந்தப் படம் மிகப் பெரிய உயிர்வாழும் சாகசமாக நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன். ஏனென்றால் நம்பமுடியாத ஒன்று உண்மையில் ஒருவருக்கு நடந்தது. புனைகதையை விட உண்மை எப்போதும் விசித்திரமாக இருக்கும். உண்மையில், நாவலின் டேக்லைனான ‘நாம் வாழாத வாழ்க்கை அனைத்தும் நமக்கு கட்டுக்கதைகள்’ என்பதுதான் படத்தின் ஆன்மாவும். படத்திற்காக கிட்டத்தட்ட பத்து வருடம் ஆகிவிட்டது. ஆனால்,ரிச்சர்ட் அட்டன்பரோ காந்தியை உருவாக்க செலவிட்டதில் பாதி நேரத்தை நான் செலவிட்டேன். அது பெரிய விஷயமல்ல. பார்வையாளர்களுக்கு படம் நிச்சயம் பிடிக்கும் என நம்புகிறேன்”.
படம் பற்றிய தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட பிருத்விராஜ் சுகுமாரன், “இது ஒரு நீண்ட பயணம் மற்றும் எளிதான ஒன்றல்ல. பத்துவருட கால காத்திருப்புக்குப் பிறகு, எங்கள் கடின உழைப்பின் பலனை பார்வையாளர்கள் பார்க்கிறார்கள். கோவிட் நாட்களில் இருந்து இன்று வரை, இந்தப் படம் ஒரு எதிர்பாராத மற்றும் மறக்க முடியாத பயணமாக உள்ளது. ப்ளெஸ்ஸி சார் அவர்களின் பார்வையில் ஒரு பகுதியாக இருப்பதும், ஏ.ஆர். ரஹ்மான் போன்ற ஒரு மேஸ்ட்ரோ, இசையை உயிர்ப்பிப்பதைப் பார்ப்பதும் எனக்கு ஒரு மரியாதை. ‘தி கோட் லைஃப்- ஆடு ஜீவிதம்’ நமக்கு ஒரு திரைப்படம் என்பதை விட, இது நம் இதயங்களைத் தொட்ட ஒரு கதை. இது எப்போதும் நம்முடன் இருக்கும். பார்வையாளர்களும் அவ்வாறே உணருவார்கள் என நம்புகிறோம்” என்றார்.