அஜித்தின் அடுத்த படத்தின் பெயர் ‘குட் பேட் அக்லி’!
அஜித் நடிப்பில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ’விடாமுயற்சி’ படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் . இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஓராண்டுக்கு மேலாக அஜர்பைஜான் நாட்டில் நடந்து வந்த நிலையில், சமீபத்தில் சென்னை திரும்பிய அவர், அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். காதுக்கு அருகே மூளைக்கு செல்லும் நரம்பில் வீக்கம் இருந்ததால், அஜித்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 3 நாட்களுக்கு பிறகு வீடு திரும்பிய அஜித்குமார், அடுத்தவாரம் நடக்க உள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பங்கேற்பார் என்று அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.
இப்படத்தை தொடர்ந்து, தொடர்ந்து ற்கு அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்கிறார்கள். இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளதாகவும், இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கஉள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளது.இப்படத்திற்கு தற்போது ‘Good Bad Ugly’ (குட் பேட் அக்லீ) என்று பெயரிடப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்புக்குச் செல்ல உள்ளதாகவும், அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.