உலகநாயகன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தக்லைஃப்’ படத்தின் இருந்து திடீரென துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி விலகி விட்டதாக கூறப்படும் நிலை
யில் துல்கர் சல்மான் நடிக்க இருந்த கேரக்டரில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது இந்நிலையில்,தற்போது ஜெயம் ரவி நடிக்க இருந்த கேரக்டரில் நடிக்க அரவிந்த்சாமி,நிவின் பாலியுடன் மணிரத்னம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருவரில் ஒருவர் விரைவில் அடுத்த 2 நாட்களில் உறுதிசெய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு விடுவார் என்கிறது படக்குழு.