விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படத்தின் முதல் சிங்கிள் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது . இப்பாடலை யுவன் சங்கர் ராஜா இசையில்,மதன் கார்க்கி வரிகளில் விஜய் பாடியுள்ளார். இது தொடர்பான வீடியோவில், விஜய் குரலில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ என்ற வார்த்தை ஒலிக்க உற்சாகமான பின்னணி இசை தெறிக்க விடுகிறது.
பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா? அதிரடி கலக்கட்டுமா?
கேம்பனை தான் தொறக்கட்டுமா? மைக்கை கையில் எடுக்கட்டுமா?
இடி இடிச்சா என் வாய்ஸ் தான். வெடி வெடிச்சா என் பாய்ஸ் தான்
குடிமகன் தான் நம் கூட்டணி, பார்ட்டி விட்டு தான் போ மாட்டேன் நீ சத்தம் பத்தாது விசில் போடு, குத்தம் பாக்காம விசில் போடு ரத்தம் பாத்ததும் விசில் போடு ஹே நண்பி நண்பா விசில் போடு என மறைமுகமான அரசியல் கருத்துக்களும் இடம்பெற்றுள்ளது. இதனால் உற்சாகமடைந்துள்ள விஜய் ரசிகர்கள் இப்பாடலைடிரெண்டாகி வருகின்றனர் இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கிறார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.