இளையராஜா இல்லை என்றால் வைரமுத்து இல்லை ! கொந்தளித்த கங்கை அமரன் !!

இசைஞானி இளையராஜாவுக்கும் கவிப்பேரரசு வைரமுத்துக்கும் உள்ள ‘உரசல்’ ஊருக்கே தெரிந்தது  தான் இந்நிலையில், கவிஞர்  வைரமுத்து சமீபத்தில் நடந்த  சினிமா விழாவில், இளையராஜாவின் பெயரை கூட குறிப்பிடாமல், பாடல் வரிகளும் இசையும் கலந்ததுதான் ஒரு நல்ல பாடல் என தனது கருத்தை முன்வைத்து இசைப் பெரியதா? பாடல் வரி பெரியதா? என கேட்பவன் ‘ஞானி’ அல்ல ‘அஞ்ஞானி’ என இளையராஜாவை மறைமுகமாக சீண்டி இருந்தார். இது சமூக வலைதங்களில் வைரலாக பரவியது.

 இதை ப்பார்த்த இளையராஜாவின் தம்பியும், பிரபல இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கை அமரன் ஒரு வீடியோவை வெளியிட்டு,  ‘வைரமுத்துவை வளர்த்து விட்டதே நாங்கள்தான் என்றும் இளையராஜா இல்லை என்றால் வைரமுத்து இந்த அளவுக்கு வளர்ந்திருக்க மாட்டார் என்றும் வைரமுத்துவுக்கு கொஞ்சம் கூட நன்றி விசுவாசம் இல்லை. வைரமுத்து நல்ல பாடலாசிரியர் தான். ஆனால் அவர் ஒரு நல்ல மனிதர் கிடையாது  இதற்கு மேல் வைரமுத்து இளையராஜா பற்றி தவறாக ஏதாவது பேசினால்’ என பகிரங்கமாக வைரமுத்துவை   திட்டித் தீர்த்து இருக்கிறார்.

இவ்வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘இளையராஜா பயோபிக்’கிற்கு கிளைமேக்ஸே சீக்கிரம் ‘ கிடைத்து விடும் என ரசிகர்கள் கிண்டலடித்தும், வைரமுத்துவின் சாதனைகளுக்கு கொஞ்சம் கூட மதிப்பு அளிக்காமல் இந்த சண்டையை ஊதி பெரிதாக்கி விட்டார் கங்கை அமரன்  என்றும் பதிவிட்டு வருகின்றனர்.