தமிழ்த்திரையுலகில் கடந்த 1977-ல் ஸ்ரீ கிருஷ்ணலீலா படத்தில் எஸ்.வி. வெங்கட்ராமன் இசையில் தனது கணவர் ஏ.வி ரமணனுடன் இணைந்து மோகன கண்ணன் முரளி என்ற பாடலின் மூலம் பாடகியாக அறிமுகமானார் உமா ரமணன் (வயது 69 ) . 1980-ல் வெளியான ‘நிழல்கள்’ படத்தில் இடம்பெற்ற ‘பூங்கதவே தாழ் திறவாய்’ என்ற பாடலின் மூலம் தமிழ் திரை இசை ரசிகர்களின் மனதில் அழுத்தமாக பதிந்தார். தொடர்ந்து பன்னீர் புஷ்பங்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஆனந்த ராகம் கேட்கும் காலம்..’ ‘நிழல்கள்’ படத்தில் இடம்பெற்ற ‘பூங்கதவே தாழ்திறவாய்’, ‘மெல்ல பேசுங்கள்’ படத்தில் இடம்பெற்ற ‘செவ்வந்தி பூக்களில் செய்த வீடு’, உள்ளிட்ட பாடல்கள் மூலம் தமிழ் திரை இசை ரசிகர்களின் மனதில் அழுத்தமாக பதிந்தவர் உமா ரமணன். தொடர்ந்து ‘ஆகாய வெண்ணிலாவே..’, ‘நீ பாதி நான் பாதி..’, ‘பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்..’ உள்ளிட்ட ஏராளமான பாடல்களை இளையராஜா, எம்.எஸ்.வி, வித்யாசாகர் உள்ளிட்ட இசை அமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார் . விஜய் நடித்த திருப்பாச்சி திரைப்படத்தில், “கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு..” பாடலை பாடியிருந்தார் உமா ரமணன். அதன் பிறகு பாடல் வாய்ப்புகள் அதிகம் கிடைக்காவிட்டாலும் மேடைக் கச்சேரிகளில் கணவர் ரமணன் உடன் இணைந்து பாடி வந்தார் உமா ரமணன். உமா ரமணனின் கணவர் ரமணனும் பிண்ணனி பாடகர் தான். ஆயிரக்கணக்கான மேடைக் கச்சேரிகளில் பாடியுள்ள ரமணன், சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான ‘சப்த ஸ்வரங்கள்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராக அனைவருக்கும் நன்கு அறிமுகமானவர் ரமணன். உமா ரமணன் 70 களில் ஏ.வி. ரமணனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விக்னேஷ் ரமணன் என்கிற மகன் உள்ளார்.இந்நிலையில் சென்னை அடையாறில் குடும்பத்துடன் வசித்து வந்த உமா ரமணன், தனது கணவருடன் ஆயிரக்கணக்கான மேடைகளிலும் இசை கச்சேரி செய்து வந்த நிலையில்,வீட்டில் கீழே விழுந்ததில் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 8 மாதங்களாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்,நேற்று மாலை உடலில் பின்னடைவு ஏற்பட்டு இரவு 7 .45 மணிக்கு காலமானார்.அவரது உடல் சென்னை அடையார் காந்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இறுதி சடங்கு நடைபெற்று, பெசன்ட் நகர் மின் மயானத்தில் உடல் தகனம் நடை பெறுகிறது.பாடகி உமா ரமணனின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்தும் நேரில் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்
உமா ரமணன் தமிழில் பல நூறு பாடல்களைப் பாடி ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொண்டவர். முதல் வாய்ப்பு இந்திப் படத்தில் 1977-ல் அமைந்தாலும், அவருக்கு திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது இளையராஜாவின் இசையில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான நிழல்கள் படத்தில் “பூங்கதவே தாழ்திறவாய்” பாடல். நிழல்கள் படத்தின் பாடல்களின் வெற்றியைத் தொடர்ந்து இளையராஜாவின் இசையில் ஏராளமான பாடல்களை பாடி ஹிட் கொடுத்தவர் உமா ரமணன். அந்த வரிசையில் 1981-ல் நடிகர் சுரேஷ் அறிமுகமான பன்னீர் புஷ்பங்கள் திரைப்படத்தில் உமா ரமணன் குரலில் இடம்பெற்ற “ஆனந்த ராகம் கேட்கும் நேரம்” பாடல் இளையராஜாவின் எவர்கிரீன் ‘ஹிட்’ கள் ஒன்றாக திகழ்கிறது.மூடுபனி, கர்ஜனை என இளையராஜாவின் இசையில் ஏராளமான திரைப்படங்களில் பாடல்களைப் பாடிரசிகர்களின் மனதில் நிரந்தர இடத்தை பிடித்தார்.உமா ரமணன், இளையராஜா மட்டுமின்றி, எம்.எஸ். விஸ்வநாதன், சங்கர் கணேஷ், டி,ராஜேந்தர், தேவா, சிற்பி, வித்யாசாகர், மணி ஷர்மா என ஏராளமான இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை பாடி அசத்தியுள்ளார்.கணவர் எஸ்.வி ரமணனுடன் இணைந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடை இசைக் கச்சேரிகளில் பங்கேற்று உலகெங்கிலும் உள்ள தமிழ் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்துள்ள பாடகி உமா ரமணின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.