மொழி பெரியதா, இசை பெரியதா? என்ற விவாதம் சர்ச்சையாகியுள்ள நிலையில், கங்கை அமரன் வைரமுத்துவை கடுமையாக விமர்சித்து பேசியது சமூகவலைத்தள பக்கத்தில் பேசு பொருளாகி பலரும் வைரமுத்துவிற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், வைரமுத்து இன்று மீண்டும் ட்விட்டரில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,”அதில், குயில் கூவத் தொடங்கிவிட்டால் காடு தன் உரையாடலை நிறுத்திக்கொள்ள வேண்டும் புயல் வீசத் தொடங்கிவிட்டால் ஜன்னல் தன் வாயை மூடிக்கொள்ள வேண்டும் வெள்ளம் படையெடுக்கத் தொடங்கிவிட்டால் நாணல் நதிக்கரையில் தலை சாய்த்துக் கொள்ள வேண்டும் மக்கள் தனக்காகப் பேசத் தொடங்கிவிட்டால் கவிஞன் தன் குரலைத் தணித்துக்கொள்ள வேண்டும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது” என பதிவிட்டுள்ளார். தன்னை விமர்சித்த கங்கை அமரனுக்கு வைரமுத்து தனது கவிதை மூலமாக மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளதாக கூறப்படும் இந்த பதிவு இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
குயில்
கூவத் தொடங்கிவிட்டால்
காடு தன் உரையாடலை
நிறுத்திக்கொள்ள வேண்டும்புயல்
வீசத் தொடங்கிவிட்டால்
ஜன்னல் தன் வாயை
மூடிக்கொள்ள வேண்டும்வெள்ளம்
படையெடுக்கத் தொடங்கிவிட்டால்
நாணல் நதிக்கரையில்
தலைசாய்த்துக்கொள்ள வேண்டும்மக்கள்
தனக்காகப்
பேசத் தொடங்கிவிட்டால்
கவிஞன் தன்…— வைரமுத்து (@Vairamuthu) May 4, 2024












