விளையாட்டு அல்லது சினிமா என்ற குறுகிய அளவில் நின்றுவிடாமல், பார்வையாளர்களையும் சினிமாவிற்குள் பங்கெடுக்க வைக்கும் விதமாக உருவாகியுள்ள “இருவம்” இந்தியாவின் முதல் லைவ் ஆக்ஷன் கேம்/திரைப்படமாக உருவாகியுள்ளது.அதாவது ‘இருவம்’ படைப்பில் இடம்பெற்றுள்ள கதை மாந்தர்களின் முடிவுகளை பார்வையாளர்களே தேர்ந்தெடுக்கும் வகையில் மொத்தம் 7 விதமான கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
ரசிகர்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் திரையில் பிரதிபலிக்கும்.இக்கதையின் முடிவைத் தீர்மானிக்கப் போவதும் அவர்கள் தான். ஆக இதில் பார்வையாளர்களும் படைப்பாளிகள். இந்த புதுவித அனுபவத்தைத் தமிழ் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுக்க இருக்கிற ரசிகர்களுக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் இப்படைப்பு உருவாகியிருக்கிறது.
‘இருவம்’ திரைப்படம் இந்திய சினிமா மற்றும் கேமிங்கிற்கான ஒரு முக்கியமான சாதனையாக, கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவின் ‘லெட்ஸ் ஸ்பூக் கேன்ஸ்’ நிகழ்வுக்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.சினிமா மற்றும் வீடியோ கேம் ஆகிய இருபெரும் துறையை இணைத்து, எளிய மக்களும் பயன்படுத்தும் செல்போன் குறுந்திரையில் வெளியாக உள்ள இப்படத்தை மனோஜ் அண்ணாதுரை இயக்கியுள்ளார்
இப்படத்தில் வர்ஷா பொல்லம்மா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொழிலன், கார்த்திக் ஜீவானந்தம் மற்றும் மனு மித்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் அர்ஜுன் வெங்கடேஷ் ஒளிப்பதிவில்,திமோதி மதுகர் இசையமைத்துள்ளார்.