‘வாடிவாசல்’ இயக்குனர் வெற்றிமாறன் புது முடிவு!
நடிகர் சூர்யாவின் நடிப்பில்,சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் கங்குவா இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.இப்படத்தை தொடர்ந்து கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் சமீபத்தில் வெளியாகின. இந்நிலையில் சூர்யா வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவுள்ள வாடிவாசல் படம் குறித்த அப்டேட் கோலிவுட் வட்டாரத்தில் வைரலாக பரவி வருகிறது.இந்த படத்தில் சூர்யா, மாடுபிடி வீரராக நடிக்கிறார். இதற்காக சிறப்பு பயிற்சிகளைப் பெற்றார். மேலும், இப்படத்துக்காக தானே சொந்தமாக ஒரு காளைமாடு வாங்கி வீட்டில் வளர்த்தும் வருகிறார்.இந்நிலையில், அடுத்த இரண்டு மாதங்களில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் மொத்தப் பணிகளையும் இயக்குனர் வெற்றிமாறன் முடித்து விட்டு, அதன் பின்னர் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது என்ற தகவல்தான் அது. அதாவது ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் இருந்து படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இந்த தகவல் சூர்யாவின் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது