சிறுத்தை சிவா இயக்கத்தில்,சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டவர்கள் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘கங்குவா’ வரும் அக்டோபர் 10ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. வரலாற்று பின்னணியில் சூர்யா 10க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்துள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.வரும் ஜூலை 23ம் தேதி சூர்யாவின் பிறந்தநாளையொட்டி இந்தப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது.அதே போல் சூர்யா பிறந்தநாளையொட்டி கார்த்திக் சுப்புராஜ் இயக்கிவரும் ‘சூர்யா 44’ படத்தின் தலைப்பும் அறிவிக்கப்படும் என்கிறார்கள்.இப் படத்திற்கு ‘சிறை’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இன்னும் சில தினங்களில் படத்தின் தலைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது.