’டிமாண்டி காலனி 2’ பாகம்: ரெட் ஜெயண்ட் வெளியிடுகிறது!

தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி பாணியை பின்பற்றி நடித்து வரும் அருள் நிதியின் நடிப்பில், கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம்  ’டிமான்டி காலனி’ . இந்நிலையில் இப்படம் வெளியாகி 9 ஆண்டுகளுக்கு பின்னர்  ’டிமாண்டி காலனி 2’ பாகம் உருவாகி வந்த நிலையில் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து வெளியீட்டுக்கு  தயாராக இருப்பதாகவும், இந்த படத்தின்  வெளியீட்டு  தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்,  இப்படத்தின் 3 மற்றும் 4 ம் பாகம் உருவாகும் என  இயக்குனர் அஜய் ஞானமுத்து  கூறியுள்ளது  இப்படத்தின் மீதான  எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.இந்நிலையில் இப்படத்தின்  வெளியீட்டு  உரிமையை ரெட் ஜெயண்ட்நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது