‘தக் லைப்’ டப்பிங் பணியை தொடங்கிய சிம்பு!


நாயகன் படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம், கமல்ஹாசனுடன் ‘தக் லைப்’ படத்தின் மூலம் 34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளார்.இதில் கமலுடன் சிம்பு, திரிஷா, அபிராமி, வையாபுரி, நாசர் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளதாக கூறப்படும் இப்படத்தில் படத்தில் கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் சிம்பு இந்த படத்தின் டப்பிங் பணிகளை துவங்கியுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.இதையடுத்து கமல் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகும் என்கிறார்கள்.