ஐரோப்பாவுக்கும் இந்தியாவுக்கும் கடல் வழி கண்ட போர்த்துகீசிய மாலுமிதான் வாஸ் கோட காமா .! இவரது பெயரை சிறைச்சாலைக்கு வைத்து வன்மத்தினை தீர்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர் ஆர். ஜி. கே .
கலியுகத்தை அடுத்து வரும் யுகத்தில் எல்லோருமே அயோக்கியன்ஸ் தான்.!தீமைதான் ஆட்சி பீடத்தில் என்று ‘வித்தியாசமாக’ சிந்தித்திருக்கிறார்கள் .தூரத்துப்பார்வை. கூர்மையாக இருக்கிறது.
நன்மை செய்தவர்கள் சிறையிலும் ,தீயவர்கள் வெளியிலும் இருக்கிறார்கள். அநியாயம் ,அக்கிரமம் ,நாடு முழுமையும்.! கதாநாயகி அர்த்தனா பிலு நல்ல மணமகனுக்காக வெயிட்டிங்கில் இருக்க ,அப்பா ஆனந்தராஜோ ஒரு அயோக்கியன்தான் மருமகனாக வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார்.!
அர்த்தனா கில்லாடியாக இருப்பதால் காதலன் நகுலை உல்டாவாக காட்டி கல்யாணம் பண்ணிக் கொள்கிறார்.
இதற்கு பிறகு என்ன நடக்கிறது என்பதே மீதிக் கதை. சிரிப்பலைகளுடன் போகிறது. கதைக்குள் காட்சிகள் அடங்காமல் கை மீறிப் போய் விட்டது.
துடிப்பான நடிப்புடன் நாயகன் நகுல். நல்லவன் முரடன் என்று புல் மீல்ஸ் . நாயகி அர்த்தனா பிலுவுக்கு அவ்வளவாக வேலை இல்லை.
வம்சி கிருஷ்ணா மெயின் வில்லன். திகம்பர சாமியார்மாதிரி.!
கே எஸ் ரவி குமாரிடம் என்ன சொல்லி கதைக்குள் கொண்டு வந்தார்களோ , ! சார்வாள் பூ வாணம் மாதிரி . கலர் கலராய் மின்னுகிறார்.
சதீஷ் குமார் ஒளிப்பதிவு .
இசை அருண்.
வித்தியாசமான பெயர் பிடித்தவர்கள் லாஜிக்கையும் கலந்திருக்க வேண்டும்.
டம் டம் டமார்.!
—தேவிமணி.