திரைப்பட தயாரிப்பாளர் டில்லிபாபு காலமானார்!

தமிழில் ராட்சஷன் , பேச்சுலர், ஓ மை கடவுளே, கள்வன், இரவுக்கு ஆயிரம் கண்கள்  உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளவர் டில்லிபாபு (வயது 50). குடும்பத்துடன் பெருங்களத்தூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு   ஒன்றில் வசித்து வரும் இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்

.தற்போது  மிடில் கிளாஸ், வளையம், யார் அழைப்பது போன்ற படங்களையும்  தயாரித்து வருகிறார். கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவ மனை ஒன்றில்  சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 12.30 மணியளவில் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக பெருங்களத்தூரில் உள்ள அவரது உடல் வைக்களப்பட்டுள்ளது . இறுதிச்சடங்கு இன்று மாலை 4.30 மணியளவில் நடந்தது .அவரது மறைவுக்கு இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் திரையுலகினர் என பலரும்  சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.