நடிகர் ஜெயம் ரவி.கடந்த 2009ல் திரைப்படத் தயாரிப்பாளர் சுஜாதாவின் மகள் ஆர்த்தியை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.மனமொத்த தம்பதிங்கள்க கடந்த 15 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் இடையே என்ன நடந்ததோ தெரியவில்லை இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக இப்போது பிரிந்து விட்டனர். இது குறித்து நேற்று (செப்., 9) ஜெயம் ரவி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், ‛‛நீண்டகால யோசனை, பல பரிசீலனைக்கு பின் ஆர்த்தியை பிரியலாம் என்ற கடினமான முடிவை எடுத்துள்ளேன். இது எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சாந்தவர்களின் நலனை கருதி எடுக்கப்பட்டது. இது எனது சொந்த முடிவு என்பதால் எனது தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டுகிறேன். அனைவரின் ஆதரவுக்கு நன்றி” என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இன்று காலை விவாகரத்து கோரி சென்னை உயர்நீதிமன்ற குடும்பநல கோர்ட்டில் ஜெயம் ரவி மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கடந்த 2009ல் ஆர்த்தியை திருமணம் செய்ததை ரத்து செய்யக் கோரியும், விவாகரத்து கோரியும் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை வரும் அக்டோபர் 10ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இன்று நடிகர் ஜெயம் ரவி தனது 44வது பிறந்தநாளை கொண்டாடும் வேளையில் விவாகரத்து முடிவை மேற்கொண்டுள்ளது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.