நடிகர் தனுஷ்-படத் தயாரிப்பாளர் சங்கத்துடனான மோதலில் தனுஷுக்கு ரெட் கார்டு போடப்பட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில், தென்னிந்திய நடிகர் சங்கம் தலையிட்டு சமரச பேச்சுவார்த்தை நடத்தியதில் இருதரப்புக்கும் சுமூக முடிவு எட்டப்பட்டது. சம்பந்தப்பட்ட 2 தயாரிப்பாளர்களில் ஒருவரது படத்தில் நடித்து கொருப்பது என்றும் மற்றொரு தயாரிப்பாளரிடம் வாங்கிய அட்வான்சை திருப்பி தருவது எனவும் முடிவு செய்யப்பட்டது.இந்நிலையில் இவ்விவகாரத்த்தில் தனக்கு ஆதரவாக நின்று சிக்கலை தீர்த்து வைத்த தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்,தனுஷ் கூறியுள்ளதாவது,”எனது தயாரிப்பாளர்கள், தேனாண்டாள் பிலிம்ஸ் (திரு. முரளி அவர்கள்) மற்றும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் (திரு கதிரேசன் அவர்கள்) எழுப்பிய புகார்களை, தீர்க்க உதவிய நம் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்பிகிறேன். உங்கள் சரியான தலையீடு மற்றும் நேர்மையான வழிகாட்டுதல், எங்களை நோக்கிய சவால்களை சமாளிக்கவும் பரஸ்பர நன்மை பயக்கும் உடன்பாட்டை அடையவும் எங்களுக்கு உதவியது.சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பதில் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட்ட ஊழியர் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய மிக முக்கியமான பேச்சுவார்த்தைகளை நான் குறிப்பாக அங்கீகரிக்க விரும்புகிறேன்.உங்கள் முயற்சிக்கு என் ஆழ்ந்த நன்றிகள். தங்கள் உதவி பொருட்டு 11/09/2024 அன்று எங்கள் படப்பிடிப்பை மீண்டும் நல்லவிதமாக தொடங்க முடிந்தது. தங்களின் அசைக்க முடியாத ஆதரவுக்காக நாசர்,.கார்த்தி,.விஷால், கருணாஸ் மற்றும் பூச்சி முருகன் ஆகியோருக்கு நான் சிறப்பு நன்றியினை தெரிவிக்க விரும்புகிறேன்.இந்த பிரச்சினைகளைத் தீர்ப்பது எங்களுக்கு உதவியது மட்டுமல்லாமல், தொழில்துறைக்கு நேர்மறையான முன்னுதாரணத்தையும் அமைத்துள்ளது. நம் நடிகர் சங்கம் முயற்சித்து வரும் பல சிறந்த திட்டங்களுக்கும் முன்னெடுப்புகளுக்கும் எனது மனமார்த்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு தனுஷ் கூறியுள்ளார்