தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

இந்திய அளவில் முன்னணி நடிகராக வலம் வரும்   நடிகர் தனுஷ் தற்போது , ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்  இவர்,கடந்த 2004-ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை,காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு, யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் உள்ளனர்.   இந்நிலையில் 18 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த இருவரும் கடந்த ஜனவரி 2022ஆம் ஆண்டு பிரிவதாக அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து, தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து மனு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டு,விசாரணை நடந்து வருகிறது.கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது கடந்த அக்டோபர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.இருவரும் நேரில் ஆஜராக உத்தரவிட்ட நிலையில், ஆஜராகாததால் (இன்று )அக்டோபர் 19 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் தனுஷ், ஐஸ்வர்யா இன்றும் ஆஜராகததால் விசாரணையை வரும் நவம்பர் .2ம் தேதிக்கு  ஒத்திவைத்து சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுபா தேவி உத்தரவிட்டுள்ளார்.இந்நிலையில் ரஜினியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்யும் முடிவை  கை விட்டு, இணைந்து வாழ முடிவு  செய்துள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்தின் வீட்டில் இரு குடும்பத்தினரும் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.