ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து வழக்கில் நீதிபதி புதிய உத்தரவு!

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய இருப்பதாக கடந்த செப்டம்பர் மாதம் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இது திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அடுத்த அதிரடியாக மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கலும் செய்திரு ந்தார். அந்த மனுவில், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்றும் கடந்த 2009 ஆண்டு பதிவு செய்த தங்கள் திருமண பதிவை ரத்து செய்து,அறிவிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.இதற்கிடையே ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, வெளியிட்ட அறிக்கையில், ” விவாகரத்து முடிவை என் ஒப்புதல் இல்லாமல் ஜெயம் ரவி தன்னிச்சையாக எடுத்துள்ளார் என்றும், இந்த விவாகரத்தில் எனக்கு உடன்பாடு இல்லை,நான் தனிப்பட்ட முறையில் ஜெயம் ரவியை சந்தித்து பேச அனுமதி கேட்டும் இதுநாள் வரை அனுமதி கிடைக்கவில்லை. விவாகரத்து விஷயத்தில் அவருடன் தனிப்பட்ட முறையில் பேச காத்திருக்கிறேன் என கூறி இருந்தார் இந்நிலையில் இவ்வழக்கு இன்று சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன் விசாரணைக்கு வந்தது. இதில் ஜெயம் ரவி, நேரில் ஆஜராகி இருந்தார். ஆனால், ஆர்த்தி நீதி மன்றத்திற்கு வராமல் காணொலி காட்சி மூலமாக ஆஜராகி இருந்தார். இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தேன்மொழி,

இருவருக்கும் இடையேயான பிரச்சினை தொடர்பாக குடும்பநல நீதிமன்ற சமரச தீர்வு மையத்தின் மூலம் இன்றைய தினமே சந்தித்து பேச இருவருக்கும் நீதிபதி உத்தரவிட்டார். அங்கு எடுக்கப்படும் முடிவு தொடர்பாக விபரங்களை இன்றைய தினமே தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.இதையடுத்து ஆர்த்தி தரப்பு,உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பேச்சுவார்த்தையை ஒத்திவைக்க வேண்டும் என்ற வாதத்தை முன் வைத்தது. இதையடுத்து இவ் வழக்கை வரும் நவம்பர் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்து குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது.