‘கூலி’ படப்பிடிப்பில் மீண்டும் இணைந்த ஸ்ருதிஹாசன்!
நடிகை ஸ்ருதிஹாசன், தற்போது ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தில் ‘ப்ரீத்தி’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் நாகர்ஜூனா, உபேந்திரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில் இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு, தற்போது,சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இப்படபிடிப்பில் தற்போது நடிகை ஸ்ருதிஹாசன், மீண்டும் இணைந்துள்ளார் இது குறித்த தகவலை தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்