நடிகர் அல்லு அர்ஜூன் அதிரடி கைது! உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது !!
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா-2 திரைப்படம் கடந்த 4 ம் தேதி வெளியானது இப்படத்தின் சிறப்பு காட்சி ஒரு நாளைக்கு முன்னதாக ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் இரவு 9 மணிக்கு திரையிடப்பட்டது ஒரு டிக்கெட் 5 ஆயிரம் வரை விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இக்காட்சியை காண அந்த திரையரங்கின் முன்பு கடும் கூட்டம் கூடியது .பாதுகாப்புக்காக போலீசாரம் நிறுத்தப்பட்டு இருந்தனர் இந்நிலையில்,இக்கூட்டத்தை பார்க்க நடிகர் அல்லு அர்ஜூன் உள்ளிட்ட படக்குழுவினர் முன்னறிவிப்பின்றி அங்கு வந்ததாக கூறப்படுகிறது .
இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி (வயது 32 ) அவரது கணவர், மற்றும் குழந்தை சிக்கினார் இதில் ரேவதி பரிதாபமாக இறந்து போனார் . கணவர் மற்றும் குழந்தை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகின்றனர்.இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து, டிசம்பர் 5 ஆம் தேதி, அல்லு அர்ஜுன், அவரது பாதுகாப்புக் குழுவினர் மற்றும் தியேட்டர் நிர்வாகம் மீது சிக்காட்பல்லி காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவுகள் 105 மற்றும் 118 (1) இன் கீழ் ஐதராபாத் போலீஸார் வழக்குப் பதிவு செய்து,தியேட்டர் உரிமையாளர்களில் ஒருவர், அதன் மூத்த மேலாளர் மற்றும் கீழ் பால்கனி பொறுப்பாளர். என மூன்று நபர்களை கைது செய்தனர்:
இவ்விசாரணையில் நடந்த சம்பவத்துக்கு நடிகர் அல்லு அர்ஜுன் முன்னறிவிப்பின்றி திரையரங்குக்கு வந்ததே காரணம் என்றும் மேலும் திரையரங்கிற்கு வெளியே அல்லு அர்ஜுனை காணவந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கித் தான் ரேவதி இறந்ததாகவும் என சம்பந்தப்பட்ட திரையரங்கு நிர்வாகத்தினர் போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அல்லு அர்ஜூன் அறிவித்தார். மேலும், படக்குழுவினர் அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு உதவுவார்கள் என்றும் அறிவித்தார். அதோடு, தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோர்ட்டில் மனு தாக்கலும் செய்தார்.
இந்நிலையில், ஐதராபாத்தில் இன்று நடிகர் அல்லு அர்ஜூனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது தெரிந்தே மரணத்தை விளைவித்தல், திட்டமிட்டு கொடுங்காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
வெள்ளை நிற ஷ்ரக் டிஷர்ட் மற்றும் பேண்ட்டுடன் கையில் டீக்கப் ஒன்றை வைத்து குடித்தவாரே போலீசாரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் அல்லு அர்ஜுன், பின்னர் போலீசார் அவருக்கு விளக்கமளித்து போலீஸ் காருக்கு அழைத்து செல்லும் போது அவரது மனைவி சினேகா ரெட்டி கண்கலங்கி நின்றார்.
மனைவி கண்கலங்குவதை பார்த்த அல்லு அர்ஜுன் மீண்டும் தன் மனைவி அருகில் வந்து சமாதானம் செய்து கன்னத்தில் முத்தமிட்டபின் போலீஸ் காரில் ஏறி சென்றார்.
காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அவருடைய கைதுக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கண்டனம் தெரிவித்திருந்தார். அதுபோல வருண் தவான், ”சந்தியா திரையரங்கில் நடந்த விஷயம் மிகவும் மனவேதனை அளிக்கிறது. ஆனால், அதே நேரத்தில் ஒரு நபர் மீது மட்டும் குற்றத்தை சுமத்த முடியாது” எனக் கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு 14 நாள் காவலில் வைக்க நாம்பள்ளி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்படுவார் என தகவல் வெளியானது. அதேநேரத்தில், அவரை ஜாமீனில் எடுக்கவும் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தெலுங்கானா உயர்நீதிமன்றம் அவருக்கு, இடைக்கால ஜாமீன் கொடுத்துள்ளது.
இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் கணவர் பாஸ்கர், “வழக்கை வாபஸ் பெற தயாராக இருக்கிறேன். கைது செய்யப்பட்டது எனக்கு தெரியாது. அல்லு அர்ஜூனுக்கும் என் மனைவி இறந்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.