‘சகுனி’ பட இயக்குனர் திடீர் மரணம் ! திரையுலகினர் கடும் அதிர்ச்சி!!

நடிகர் கார்த்தி, சந்தானம், ராதிகா உள்ளிட்டவர்களின் நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான படம் சகுனி. இப் படத்தினை சங்கர் தயாள்(வயது 54) இயக்கி இருந்தார்.இதையடுத்து இவரது, இயக்கத்தில் வெளியான படம் வீர தீர சூரன்.இப்படங்களை தொடர்ந்து தற்போது இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படம்,’குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’. இப்படத்தில் யோகிபாபு, செந்தில், சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ப்ரோமோசன் நிகழ்ச்சிஒன்றை , படக்குழு ஏற்பாடு செய்திருந்தது.இந்நிகழ்வில் கலந்து கொள்ள இயக்குநர் சங்கர் தயாள் காரில் சென்ற போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது வலியால் துடித்த அவரை, உடனே, அருகில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இயக்குனர் சங்கர் தயாளின் திடீர் மரணம் படக்குழுவினரை மட்டும் இல்லாமல், திரைத்துறையினரையும், ரசிகர்களையும் குடும்பத்தினரையும், நண்பர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.