விஜய்யுடன் ‘கடைசி நாள்’: பூஜா ஹெக்டேவெளியிட்ட புகைப்படம்!
நடிகர் விஜய் நடிப்பில் அவரது கடைசி படமாக உருவாகி வரும்,’தளபதி 69′ திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் பாபி தியோல், மலையாள நடிகை மமிதா பைஜூ , நரேன், பிரியாமணி, கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.அனிருத் இசையமைக்கிறார். அரசியல் கலந்த திரில்லர் படமாக இப்படம் உருவாகி வருகிறது என்கிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘தளபதி 69’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு, ‘2024 ஆம் ஆண்டு நடைபெறும் தளபதி 69 படப்பிடிப்பின் கடைசி நாள்’ என பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் விஜய்யின் கால்கள் மட்டுமே தெரிகிறது.. மேலும் கடற்கரையில் அந்த காட்சி படமாக்கப்பட்டு வருவதாகவும் தெரிகின்றது. அநேகமாக அது பாடல் காட்சியாகவோ அல்லது காதல் காட்சியாகவோ இருக்கலாம் என தெரிகிறது . இப்புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்நிலையில், ‘தளபதி 69’ படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு நேற்று முன்தினம் முடிவடைந்துள்ளதாகவும், அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் புத்தாண்டுக்கு பிறகே தொடங்கப்பட்டு அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் வரை படப்பிடிப்பு நடைபெறும் என்றும்,. அதைத்தொடர்ந்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தளபதி 69 திரைப்படத்தை வெளியிட படக்குழு முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.