‘ஜின்’ பேயை செல்லப்பிராணியாக வளர்க்கும் நாயகன்!

இணையத்தில் 4.5 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்து  வெற்றி பெற்ற ‘ஒத்த தாமரை’ பாடலை இயக்கிய டி ஆர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் திகில், ஆக்ஷன், நகைச்சுவை, காதல் கலந்த திரைப்படம் ‘ஜின் தி பெட்’. டி ஆர் பாலா‍ மற்றும் அனில் குமார் ரெட்டி தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில்,’பிக் பாஸ்’  முகேன் ராவ் மற்றும் ‘ஜோ’  பாவ்யா திரிகா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் பால சரவணன், டத்தோ ராதாரவி, இமான் அண்ணாச்சி, நந்து ஆனந்த், வடிவுக்கரசி, நிழல்கள் ரவி, விநோதினி, ஜார்ஜ் விஜய் மற்றும் ரித்விக் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட ஜின் எனும் கதாபாத்திரம்  முக்கிய இடம் பெறுகிறது.இப்படம் குறித்து அதன் இயக்குனர் டி ஆர் பாலா கூறுகையில்,, “திகில், ஆக்ஷன், நகைச்சுவை, காதல் உள்ளிட்ட உணர்வுகள் கலந்த திரைப்படமாக‌ ‘ஜின்’ உருவாகி வருகிறது. என் உறவினர் வீட்டில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில், மலேசியாவை பின்னணியாக கொண்டு கதை நடக்கிறது. ஜின் பாத்திரம் அனைவரையும் கவரும்,   ஜின் என்பது  நாய்  பூனையெல்லாம் வளர்க்கிற மாதிரி அது ஒரு செல்ல பிராணி. அதற்கு உருவம் கிடையாது அது ஒரு செல்லப்  ‘பேய் ‘என்றும் சொல்லலாம். அதன் மீது தண்ணீரோ வெயிலோ படக்கூடாது. .அப்படிப்பட்ட ஒரு ஜின்னை நாயகன் முகேன்  மலேசியாவில் இருந்து சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வருகிறார். இதையடுத்து அங்கு என்னவெல்லாம்  நடக்கிறது என்பதை தான் அமானுஷ்யம் கலந்த அதிரடி நகைச்சுவை கலந்த திரைக்கதையாக்கி இருக்கிறோம்.இந்த ஜின் பேயை சென்னை, ஹைதராபாத், கொச்சி மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களில் உள்ள தொழில்நுட்ப நிபுணர்களின் எட்டு மாத உழைப்பில் சிஜியில் உருவாக்கியிருக்கிறோம். படத்தில் கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் ஜின் காட்சிகள் இடம்பெறும் இப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும் விதத்தில் இருக்கும் என்கிறார், இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி பாராட்டுகளை குவித்து வருகிறது.இப்படத்தின் ஒளிப்பதிவை  அர்ஜுன் ராஜா கவனிக்க, விவேக் மெர்வின் இசையமைத்து வருகிறார்.