ரஜினி, விஜயகாந்த் படத் தயாரிப்பாளர்  காலமானார்!

நடிகர்  ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் மகேந்திரன் முதன் முறையாக இயக்கிய,’முள்ளும் மலரும்’ , ஆர்.சி.சக்தி இயக்கிய ‘சிறை’, பிரபு ரகுவரன் நடிப்பில், கே.சுபாஷ் இயக்கி அறிமுகமான ‘கலியுகம்’, பிரபு நடித்த ‘உத்தம புருஷன்’, ‘தர்மசீலன்’, ‘ராஜா கையை வெச்சா’. நடிகர் சத்யராஜ் நடித்த,’பங்காளி’.ஆர்.வி..உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த, ‘சின்னக்கவுண்டர்’ , சிவாஜி கணேசன்,  பிரபு நடிப்பில்  பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘பசும்பொன்’ முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நடிப்பில், பி.லெனின் இயக்கத்தில் வெளியான ‘நதியை தேடி வந்த கடல்’ போன்ற படங்களை தயாரித்தவர் ‘ஆனந்தி பிலிம்ஸ் ‘வி .நடராஜன். (வயது 70).சென்னை மயிலாப்பூரில் வசித்து வரும் இவருக்கு ஜோதி என்ற மனைவியும்,செந்தில் விக்கி என்ற இரு மகன்களும் உள்ளனர் இந்நிலையில் ‘வி .நடராஜன் கடந்த சில மாதங்களாக  உடல் நலகுறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (1-2 -2025)இரவு 1 மணி அளவில் திடீர் மாரடைப்பு காரணமாக  காலமானார். இவரது உடல்  மயிலாப்பூரில் உள்ள அவரது  வீட்டில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
இன்று மாலை 4 மணியளவில் மயிலாப்பூர் மயானத்தில் அவரது இறுதிச் சடங்குகள் நடந்தது