துல்கர் சல்மான் நடிப்பில் உருவான ‘காந்தா’!

நடிகர் துல்கர் சல்மான் சினிமாத்துறைக்கு வந்து 13 ஆண்டுகள் ஆனதை சிறப்பிக்கும் பொருட்டு,அவர் நடித்து வரும்  ‘காந்தா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தை ‘ஹண்ட் ஃபார் வீரப்பன்’ என்ற  ‘ஓடிடி’ தொடரை  இயக்கிய செல்வமணி செல்வராஜ்  இயக்கி வருகிறார். இதுகுறித்து இயக்குனர்  செல்வமணி செல்வராஜ் கூறுகையில், “நடிகர் துல்கர் சல்மானின் 13 வருட சினிமா பயணத்தை பெருமைப்படுத்தும் வகையில் ‘காந்தா’ படத்தின் முதல் பார்வையை ரசிகர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த திரைப்படம், துல்கரின் சினிமா வாழ்க்கையைப் போலவே பல பரிணாமம், சவால் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின்  பிரதிபலிப்பாக அமையும். இது நிச்சயம் அவருக்கான படமாக இருக்கும்” என்கிறார்.’ காந்தா’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை  தொடர்ந்து, இப் படத்தின் இசை வெளியீட்டு விழா, டிரெய்லர் வெளியீடு பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்கிறது படக்குழு..