கன்னிகா- சினேகன் குழந்தைக்கு பெயர் சூட்டிய கமல்ஹாசன்!

கடந்த மாதம் பாடலாசிரியர் சினேகன், கன்னிகா தம்பதிகளுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. குழந்தை பிறந்த மகிழ்ச்சியை சினேகன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

“இறைவா நீ ஆணையிடு தாயே எந்தன் மகளாய் மாறா… என்ற எனது அன்பின் கோரிக்கை இரட்டிப்பாய் நிறைவேறியது. தாயே எந்தன் மகளாகவும்… மகளே எந்தன் தாயாகவும் இரு தேவதைகள் பிறந்து இருக்கிறார்கள்” என மகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருந்தார்

இதைத்தொடர்ந்து, நேற்று கமல்ஹாசன், சினேகனின் இரட்டை பெண் குழந்தைகளுக்கு காதல், கவிதை என அழகான தமிழ் பெயர்களை வைத்து, குழந்தைகளுக்கு தங்க வளையல் அணிவித்துள்ளார். காதலர் தினத்தை தேர்வு செய்து அந்த நாளில் தனது குழந்தைகளுக்கு காதல், கவிதை பெயர்வைத்துள்ளதாக சினேகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.