ஊட்டியில் உள்ள ஒரு பிரபலமான மெடிக்கல் காலேஜ். அந்த காலேஜில் படிக்கும் மாண்வ மாணவிகள் ஒருவர் பின் ஒருவராக தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனால், அந்த ஊர் மக்கள் காலேஜில் பேய்கள் உலவுவதாக கூறி வருகின்றனர். அதனால் தான் அங்கு படிப்பவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். என்ற பேச்சும் பரவி வருகின்றது. ஆனால், காலேஜ் நிர்வாகம் மாணவர்கள் படித்து நல்ல மார்க் வாங்க முடியாத காரணத்தினாலேயே தற்கொலை செய்து கொள்வதாக கூறுகின்றனர். இன்னும் சில மாதங்களில் மாணவர் சேர்க்கை இருப்பதால், காலேஜ் தரப்பில், பேய், ஆவி எல்லாம் பொய். என நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால், மும்பையைச் சேர்ந்த (Paranormal Investigator) அமானுஷ்ய புலனாய்வாளர், நாயகன் ஆதியை மும்பையில் இருந்து வரவழைக்கின்றனர்.
நாயகன் ஆதி, தனது ஆய்வினை தொடங்குகிறார். அவருக்கு கல்லூரியின் சார்பில், ரெடின் கிங்ஸ்லி உதவுகிறார். அந்தக் கல்லூரியின் பேராசிரியரும், (Hallucination) மாயத்தோற்றம் குறித்து ஆராய்ச்சி செய்துவரும் மாணவியுமான லட்சுமி மேனனை, சில அமானுஷ்யமான சக்திகள் அவரை பின் தொட்ருவதை, ஆதி கண்டுபிடிக்கிறார். இது குறித்து லட்சுமி மேனனிடம் ஆதி கூற, நவீன விஞ்ஞான உலகத்தில் பேய்களோ, அமானுஷ்யமான சக்திகளோ இல்லை என மறுக்கிறார். சில நாட்கள் சென்ற நிலையில், லட்சுமி மேனன் ஒரு அமனுஷ்யமான சக்தியிடம் சிக்குகிறார். அதிலிருந்து காப்பாற்ற ஆது முயற்சி செய்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பது தான், சப்தம்.
ஆதி, (Paranormal Investigator) அமானுஷ்ய புலனாய்வாளராக, ஆவிகளுடன் பேசுபவராக நடித்திருக்கிறார். பெரிதாக அவரது நடிப்பினை எடுத்துக்காட்டும் வகையில் கதாபாத்திரமும் இல்லை நடிப்பும் இல்லை. ஓகேவான நடிப்பினை கொடுத்துள்ளார்.
ஆவியால் பாதிக்கப்படும் நாயகியாக லட்சுமி மேனன். குறை சொல்ல முடியாதபடி நடித்து, படம் பார்ப்பவர்களின் மனதில் இடம்பிடித்து விடுகிறார்.
சிம்ரன், லைலா, ராஜீவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களில் லைலா, சிறப்பான நடிப்பினை கொடுத்துள்ளார்.
ரெடின் கிங்ஸ்லி, படத்தின் பெரும் பலவீனம். பயம் ஏற்பட வேண்டிய இடங்களில் இவரது நடிப்பும், வசனமும் அந்தக் காட்சியையே கெடுத்து விடுகிறது.
எம்.எஸ்.பாஸ்கர், அபிநயா, விவேக் பிரசன்னா ஆகியோர் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தாலும், தங்களது இருப்பினை பதிவு செய்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாபன், சிறப்பாக படம்பிடித்திருக்கிறார்.
இசையமைப்பாளர் எஸ். தமன், இசை. ‘சப்தம்’ படத்தின் ஒன்லி சூப்பர் ஸ்டார். அவரும் இசைக்காக பணிபுரிந்த அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
‘ஈரம்’ படத்தில் தண்ணீர் மூலமாக பேய்க்கதை சொன்ன இயக்குநர் அறிவழகன், சப்தம் படத்தில், சப்தங்கள் மூலமாக கதை சொல்லியிருக்கிறார்.
வித்தியாசமான கோணத்தில் கதையை யோசித்தவர்கள், திரைக்கதையில் இன்னும் தெளிவாக இருந்திருக்கலாம். பெரிதாக திகிலும் இல்லாமல், எமோஷனலும் இல்லாமல் இருக்கிறது. இவைகள் இருந்திருந்தால் ரசிக்கும் படி இருந்திருக்கும்.
மொத்தத்தில், ‘சப்தம்’ பாராட்டத்தக்க, வித்தியாசமான முயற்சி.