Monday, May 12, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

ரெட்ரோ – (விமர்சனம்.) சூரியாவின் அதிரடி ஆக்‌ஷன் ரசிகர்களுக்கானது!

admin by admin
May 2, 2025
in Reviews
423 5
0
592
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜோதிகா – சூர்யா ஆகியோரின் ‘2-டி என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனமும், ‘ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் படம், ரெட்ரோ. இதில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம், நாசர், பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், விது, சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், கஜராஜ், உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

You might also like

என் காதலே – விமர்சனம்!

கீனோ – விமர்சனம்!

நிழற்குடை – விமர்சனம்!

ரெட்ரோ படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எழுதி, இயக்கியிருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் வெளிவந்திருக்கும் இந்தப்படம் எப்படியிருக்கிறது!

தூத்துக்குடியில் கதை நடக்கிறது. இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த சூரியா, சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் தாதா ஜோஜூ ஜார்ஜ் சுவாசிகா தம்பதியினரின் வளர்ப்பு மகனாகிறார். ஜோஜூ ஜார்ஜ் செய்து வரும் கடத்தல், அடிதடி என, அத்தனை கிரிமினல் வேலைகளையும் செய்து வருகிறார் சூரியா. இவ்வாறான செயல்களில் ஜோஜூ ஜார்ஜை மிஞ்சும் அளவிற்கு செல்கிறார்.

ஜோஜூ ஜார்ஜ் கும்பல் அரசியல்வாதி பிரகாஷ்ராஜின் தலைமையில், மிகப்பெரிய ‘தங்க மீன்’ எனும் சங்கேத வார்த்தை கொண்ட , ஒரு பொருளை கடத்துகின்றனர். சூரியா, அந்த பொருளை சென்று சேர வேண்டிய இடத்தில் சேர்க்காமல், வேறொரு இடத்தில் மறைத்து விடுகிறார். இதனால், கடும் கோபமடையும் ஜோஜூ ஜார்ஜ், சூரியாவிடம் சண்டையிடுகிறார். இருவருமே கடுமையாக மோதிக்கொள்கிறார்கள். இதில், ஜோஜூ ஜார்ஜின் கையை சூரியா வெட்டிவிடுகிறார். இந்த சம்பவத்தால், சூரியாவின் காதலி பூஜா ஹெக்டே அவரை விட்டு விலகுகிறார். இதன் பிறகு என்ன நடந்தது? ‘தங்க மீன்’ என்றால் என்ன? ஜோஜூ ஜார்ஜ் – சூரியாவுக்கும் இடையில் என்ன நடந்தது? சூரியா காதலி பூஜா ஹெக்டேவுடன் இணைந்தாரா, இல்லையா? என்பது தான், கார்த்திக் சுப்பராஜ் எழுதி, இயக்கியிருக்கும் ‘ரெட்ரோ’ படத்தின் அதிரடி ஆக்‌ஷன் திரைக்கதை, க்ளைமாக்ஸ்!

சூரியாவின் வழக்கமான படமாக இல்லாமல், முழுக்க முழுக்க, ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் கொண்ட படமாக உருவாக்கப்பட்டுள்ளது. பெண் ரசிகைகளை கட்டிப்போடும் சிரிப்போ, ரொமென்ஸ் காட்சிகளோ இல்லாமல் இருப்பது, கொஞ்சம் ஏமாற்றம் தான். பெண் ரசிகர்களை பொறுத்தவரை. சூர்யா, உடலுழைப்பினை அதிகமாக கொடுத்துள்ள படமாக இந்தப்படம் இருக்கிறது. ஆபத்தான சண்டைக்காட்சிகளில், மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். சூரியாவின் கட்டான உடலழகும், ஸ்டைலும்.. அவருது இளம் ரசிகர்களை கவர்கிறது. பூஜாவின் காதலுக்காக அவரையே சுற்றி வருவது ரசனை! இருந்தும், நன்றாக நடிக்கத் தெரிந்த ஒரு நடிகரை, இயக்குநர் கார்த்தி சுப்பராஜ் வீணடித்துள்ளார், என்பதே மறுக்க முடியாத உண்மை!

பூஜா ஹெக்டே, பாடல் காட்சிகளில் நடனத்தில்  எல்லோரையும் கவர்ந்து விடுகிறார். மற்றபடி, கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.

வில்லன் நாசரின் மகனாக, சதா நேரமும் போதையிலிருக்கும் ‘சைக்கோ’ கதாபாத்திரத்தில், ‘சட்டாணி’ விது சிறப்பாக நடித்திருக்கிறார்.

மற்றபடி படத்தில் நடித்த இயக்குநர் தமிழ் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக சண்டை காட்சிகள், சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கின்றன.

சந்தோஷ நாராயணன் இசையில், கனிமா பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். காட்சிகளுக்கேற்றபடி இல்லை. இளையராஜாவின் இசையில், ‘ஜானி’ படத்தில் இடம்பெற்ற ‘செனோரிட்டா ஐ லவ் யூ’ பாடல் சூப்பர்!

மொத்தத்தில், இயக்குநர் கார்த்தி சுப்பராஜ் ஆந்திர ஃப்ளேவரில், பாலகிருஷ்ணா நடிக்க வேண்டிய படத்தில், நன்றாக நடிக்கத்தெரிந்த ஒரு நல்ல நடிகர் சூரியாவை, வலுக்கட்டாயமாக நடிக்க வைத்துள்ளார்!?

ரெட்ரோ – சூரியாவின் அதிரடி ஆக்‌ஷன் ரசிகர்களுக்கானது!

admin

admin

Related Posts

என் காதலே – விமர்சனம்!
Reviews

என் காதலே – விமர்சனம்!

by admin
May 11, 2025
கீனோ – விமர்சனம்!
Reviews

கீனோ – விமர்சனம்!

by admin
May 11, 2025
நிழற்குடை – விமர்சனம்!
Reviews

நிழற்குடை – விமர்சனம்!

by admin
May 11, 2025
‘ஹிட் – தி தேர்ட் கேஸ்’ –  விமர்சனம்!
Reviews

‘ஹிட் – தி தேர்ட் கேஸ்’ –  விமர்சனம்!

by admin
May 3, 2025
‘சுமோ’ – விமர்சனம்!
Reviews

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ – விமர்சனம்!

by admin
May 3, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?