‘அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு’ படத்தில் தனுஷ்.!
இந்தியாவின் 11வது ஜனாதிபதியும், இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் தேசிய சின்னங்களில் ஒருவருமான பாரத ரத்னா டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த ஒரு பிரமாண்டமான திரைப்படம், அதிகாரப்பூர்வமாக தயாரிக்கப்படவுள்ளது. இந்தப் படத்தை ‘தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்’ புகழ் இயக்குனர் ஓம் ராவத் இயக்குகிறார்.தேசிய விருது பெற்ற நாயகனும், சர்வதேச
புகழ் நடிகருமான தனுஷ், இந்தத் திரைப்படத்தில் இந்தியாவே ஒருமனதாக நேசிக்கும் மனிதரான, ஏபிஜே அப்துல் கலாம் பாத்திரத்தை, ஏற்று நடிக்கிறார்.
Related Posts
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தினை தயாரித்த, ‘அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ்’ நிறுவனத்தின் கீழ் அபிஷேக் அகர்வால் தயாரிக்க, ‘டி-சீரிஸ்’ நிறுவனத்தின் கீழ் பூஷன் குமார் இணைந்து தயாரிக்கிறார். இந்தப் படத்தின் திரைக்கதையை ‘நீர்ஜா’, ‘மைதான்’ மற்றும் ‘பர்மானு: தி ஸ்டோரி ஆஃப் போக்ரான்’ போன்ற புகழ்பெற்ற வாழ்க்கை வரலாற்றுப் படங்களுக்கு எழுத்துப் பொறுப்புகளை வகித்த சைவின் குவாட்ராஸ் எழுதியுள்ளார்.
இந்தப் படத்தை அபிஷேக் அகர்வால் மற்றும் பூஷன் குமார் ஆகியோர் இணைந்து வழங்க, மேலும் அபிஷேக் அகர்வால், பூஷன் குமார், கிருஷ்ணன் குமார் மற்றும் அனில் சுங்கரா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.