காதல், கவிதைக்காக சினேகன்- கன்னிகா நடத்திய போட்டோ சூட்!
பிரபல திரைப்பட பாடலாசிரியரும், நடிகருமான சினேகன் , நடிகை கன்னிகா இருவரும் கடந்த 2021ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர் இவர்களது திருமணத்தை கமல்ஹாசன் நடத்தி வைத்தார்.இதையடுத்து கடந்த ஜனவரியில் இந்த தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. இந்த குழந்தைகளுக்கு கமல்ஹாசன் கவிதை, காதல் என பெயர் சூட்டினார்.. இந்நிலையில் கவிஞர் சினேகன் முதன் முறையாக தனது குழந்தைகளின் முகங்களை வெளியுலகிற்கு காட்டியுள்ளார் இது குறித்த போட்டோ சூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.