திண்டுக்கல்லை ஒட்டியுள்ள பகுதியில், 5 – 6 நண்பர்கள் ஒன்று சேர்ந்து, இரவில் மது அருந்துகிறார்கள். அப்போது அவர்களுக்கிடையே மோதல் ஏற்படுகிறது. அந்த மோதலில் ஒருவர் எதிர்பாரதவிதமாக இறந்து போகிறார். இதனால், அந்த பிணத்தை காரின் டிக்கியில் மறைத்து வைத்து, காட்டுப்பகுதியில் புதைக்க முடிவு செய்கின்றனர். செல்லும் வழியில் நண்பர்களுக்குள் மீண்டும் மோதல் உருவாகிறதுமதன் பிறகு என்ன நடந்தது? திட்டமிட்டபடி பிணத்தை மறைத்தார்களா, இல்லையா? என்பதை வித்தியாசமான முறையில் சொல்லியிருக்கும் படமே மனிதர்கள்.
படத்தில் நடித்திருக்கும் கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ் சரவணன், குணவந்தன், சாம்பசிவம், பிரேம் ஆகியோர் மிகையாக நடித்திருக்கிறார்கள். பயத்தினை முகத்தில் காட்டுகிறேன். என நினைத்து படம் பார்ப்பவர்களை சோதிக்கிறார்கள்.
படம் முழுவதும் இரவில் படமாக்கப்பட்டுள்ளது. சாமார்த்தியமான ஒளிப்பதிவு. என ஒளிப்பதிவாளர் அஜய் ஆபிரஹாம் ஜார்ஜை பாராட்டினாலும், தேவையற்ற குளோசப் காட்சிகளும், குலுங்கியபடியே இருக்கும் கேமராவும் கண்களுக்கு அயற்சியைத் தருகிறது. சில காட்சிகள் என்றால் ரசித்திருக்கலாம்.
இசையமைப்பாளர் அனிலேஷ் எல்.மேத்யூ இசை ஓகே!
எழுதி, இயக்கியிருக்கும் இராம் இந்திரா, கிரைம் திரில்லரை வித்தியாசமாக சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், அது எடுபடவில்லை. 15 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை எடுக்கப்பட வேண்டிய குறும்படத்தினை முழு நீளப்படமாக நீட்டியிருக்கிறார்கள்.
‘மனிதர்கள்’ – சுமார்!