ஆஸ்கர் விருது தேர்வுக்குழு: நடிகர் கமல்ஹாசனுக்கு அழைப்பு !
2025 ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்திய திரைத்துறையில் இருந்து நடிகர்கள் கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா ஆகியோருக்கு ஆஸ்கர் விருது குழு அழைப்பு விடுத்துள்ளனர். உலகளவில் திரைத்துறையில் சிறப்பாக பங்காற்றிய 534 கலைஞர்களுக்கு ஆஸ்கர் விருது நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அகாடமியில் உறுப்பினராக அழைக்கப்படுவது திரைப்படத் துறையில் ஒரு மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி, திரைப்படத் துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பிற தொழில்நுட்ப வல்லுநர்களை உறுப்பினர்களாக இணைத்து, ஆஸ்கார் விருதுகளுக்கான தேர்வு செயல்முறையில் பங்கேற்க அனுமதிக்கும் ஒரு மதிப்புமிக்க அங்கீகாரமாகும்.அகாடமி உறுப்பினர்கள், ஆஸ்கார் விருதுகளுக்கான பரிந்துரைகளை முன்மொழிந்து, இறுதி வாக்கெடுப்பில் வெற்றியாளர்களை தீர்மானிக்கின்றனர். இந்த ஆண்டு ஆஸ்கார் விருது பெற்ற ‘அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ்’ அமைப்பின் உறுப்பினர் பதவிக்கு அழைக்கப்பட்ட 534 பேரில் கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா மற்றும் அரியானா கிராண்டே ஆகியோர் அடங்குவர்.இந்த அழைப்பை அனைவரும் ஏற்றுக்கொண்டால், அகாடமி உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 11,120 ஆக இருக்கும், அவர்களில் 10,143 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த புதிய உறுப்பினர்கள் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த மேலும் பல முக்கிய ஆளுமைகள் இடம்பிடித்துள்ளனர். சர்வதேச அளவில், டேவ் பாடிஸ்டா, ஜேசன் மோமோவா, ஆப்ரே பிளாசா, டேனியல் டெட்வைலர், ஆண்ட்ரூ ஸ்காட் போன்ற பல நட்சத்திரங்கள் இந்த ஆஸ்கர் வாக்காளர்களின் புதிய குழுவில் இணைந்துள்ளனர். ஜில்லியன் ஆண்டர்சன், நவோமி ஆக்கி, மோனிகா பார்பரா, ஜோடி கோமர், ‘சக்ஸஷன்’ புகழ் கீரன் கல்கின் மற்றும் ஜெர்மி ஸ்ட்ராங், ஆஸ்கர் விருது வென்ற மைக்கி மேடிசன், அட்ரியானா பாஸ் (எமிலியா பெரெஸ்), மற்றும் செபாஸ்டியன் ஸ்டான் ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளனர்.