பிறக்கும் முன்பே குழந்தைக்கு பேர் வைத்த கிரிசில்டா – மாதம்பட்டி தம்பதி!
பிரபல சமையல் கலை நிபுணரும், நடிகருமான கோவை மாதம்பட்டி ரங்கராஜ் ரங்கராஜ்
தன் முதல் மனைவி ஸ்ருதியை பிரிந்து, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மேலும் முதல் மனைவி மூலம் 2 குழந்தைகளும் உள்ளநிலையில், ஜாய் கிரிஸில்டா திருமணத்தின் பொது 6 மாத கர்ப்பம் என பதிவிட்டு இருந்தது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில்,, மாதம்பட்டி ரங்கராஜ், கோவையில் நடைபெற்ற ராம்ராஜ் நிறுவனத்தின் முப்பெரும் விழா நிகழ்ச்சியில் முதல் மனைவி ஸ்ருதியுடன் இணைந்து கலந்து கொண்டார். ஆனாலும் அவர் ஸ்ருதியிடம் முகம் கொடுத்து பேசவில்லை என்று கூறப்படுகிறது. ஸ்ருதியின் முகத்தை கூட பார்க்காமல் ரங்கராஜ் தவிர்த்ததாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.
இந்நிலையில் , ரங்கராஜ் – கிறிஸீ ல்டா தம்பதி பிறக்கும் முன்பே பெயர் வைத்துள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை கிறிஸில்டா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தில் “மருத்துவமனைக்கு செல்வது பி லைக் ரஹா ரங்கராஜ்” எனக் குறிப்பிட்டுள்ளர். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது