அட்லீ-இயக்கத்தில் ரம்யாகிருஷ்ணன்!
ஷாருக்கானின் ஜவான் படத்தை தொடர்ந்து, பான் இந்திய பட இயக்குனர் அட்லீ, புஷ்பா பட நாயகன் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார்.இதன் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. இப்படத்தில் நாயகன் அல்லு அர்ஜுன், தாத்தா, பையன், 2 மகன்கள் என 4 கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக கூறப்படும் நிலையில், இப்படம் குறித்த எந்தவொரு தகவலோ, புகைப்படமோ கசியக் கூடாது என்பதில் கடும் எச்சரிக்கையுடன் படக்குழு பணிபுரிந்து வருகிறது. ரூ. 600 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இந்நிலையில், இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ரம்யா கிருஷ்ணன் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.. இப்படத்தின் தொழில்நுட்ப விஷயங்களை ஹாலிவுட் கலைஞர்கள் மேற்கொண்டுள்ளனர் .அவர்கள் ஹாலிவுட்டில் அவதார் திரைப்படத்தை போல் இந்த படத்திற்காக ஒரு உலகத்தை கிராபிக்ஸ் தொழிநுட்ப உதவியுடன் உருவாக்கி வருகின்றனர்.