‘பாகுபலி 2’ படத்தின் இயக்குநர் ராஜமெளலி, பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் நாசர் ஆகிய படக்குழுவினர் இன்று காலை நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில், இயக்குநர் ராஜமெளலி பேசியதாவது, “தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வரலாற்று படம் செய்ய வேண்டும் என்று தான் தொடங்கினோம். இது ஒரு கற்பனை கலந்த வரலாற்று படம். ஆகையால் கதையை 1000 வருடங்களுக்கு முன்பு நடப்பது போல வைத்துக் கொண்டோம்.’பாகுபலி’ கதையைத் தொடங்கும் போது என்ன எழுதினோமோ அது ‘பாகுபலி தி கன்க்ளூஷன்’ படத்தோடு முடிந்துவிடும். ஆனால், படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்களுக்கு அக்கதாபாத்திரத்தின் பின்னணி தெரிய வேண்டும் என நினைத்து வொர்க் பண்ணினோம். அக்கதாபாத்திரங்களுக்கு இடையேயானஅனைத்து விஷயங்களுமே மிகவும் சுவாரசியமாக வந்துள்ளது. அதை அப்படியே ரசிகர்களுக்கு சொல்லப் போகிறோம். ‘பாகுபலி’ முதல் பாகத்தில் அக்கதாபாத்திரங்களுள் என்ன நடந்தது என்பதை நாங்கள் கூறவில்லை. இரண்டாம் பாகத்தில் கதாபாத்திரங்களுக்கு இடையே உள்ள கதை மற்றும் காட்சிகள் அனைத்துமே பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது.எனக்கு பாகுபலியாக பிரபாசை மட்டுமே நினைத்து பார்க்க முடிகிறது.எனக்கு மட்டுமல்ல, இந்தியாவிலேயே யாருக்கும் வேறு ஒரு கதாபாத்திரம் நினைவில் வராது. ‘பாகுபலி’க்குப் பிறகு என்ன செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை.என் நினைவுகள் முழுவதும் தற்போது பாகுபலி தான் நிறைந்திருக்கிறான். எனது அடுத்தப்படம் மகாபாரதம் இல்லை. ‘மகாபாரதம்’ மிகவும் பெரியது. அதை எப்போது படமாக்குவேன் என தெரியவில்லை.ஆனால் என் அடுத்தப் படத்தில் கண்டிப்பாக கிராபிக்ஸ் காட்சிகள் இருக்காது. ‘பாகுபலி’ முழுக்க முழுக்க கற்பனை கதை தான்.’பாகுபலி முதல் பாகம் தொடங்கப்பட்ட போதே படத்தின் முழுக்கதையையும் எழுதி முடித்துவிட்டோம். எனவே இதை இரண்டாம் பாகம் என எடுத்துக் கொள்ள கூடாது. ஒரு பெரிய கதையை 2 பாகங்களாக கொடுக்கிறோம். அவ்வளவு தான்.இப்படத்திற்கு கிடைக்கும் அதிகப்படியான வரவேற்பை பொறுத்தே, இதன் மூன்றாம் பாகம் ஒரு வேளை உருவாகலாம்.இந்த நிமிடம் வரை எங்களுக்கு அந்த எண்ணம் இல்லை..திரையுலக ஜாம்பவான்கள் எம்.ஜி.ஆர்,என்.டி.ஆர், ராஜ்குமார், என அனைவருமே நிறைய வரலாற்று படங்களில் நடித்துள்ளார்கள். அவர்களின் படங்களின் இன்ஸ்பிரேசன் என்னுள் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், ‘அடிமைப்பெண்’ படத்தை தழுவி நான் ‘பாகுபலி’யை உருவாக்கவில்லை.ஏன்னா, அப்படத்தை நான் பார்க்கவேவில்லை. அப்படி நான் படமாக்கியிருந்தால் நானே பெருமையாகச் சொல்வேன்” என்கிறார் இயக்குநர் ராஜமெளலி.