ரூ. 14 கோடிக்கு சொகுசு கார் வாங்கிய பகத் பாசில் !

மலையாள திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் பகத் பாசில். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் கால் பதித்தார். தற்போது தென்னிந்திய அளவில் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் அஜித்தை போன்று கார் பிரியரான நடிகர் பகத்பாசில், லம்போர்கினி, மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏ.எம்.ஜி., ரேன்ஞ்ரோவர் ஆட்டோ பயோகிராப்பி, லேண்ட்ரோவர் டிபண்டர், போர்ச்சே 911, டொயோட்டா வெல்பைர், மினிகண்ட்ரிமேன், வோக்ஸ் வேகன் போன்ற ஆடம்பர வசதிகளுடன் கூடிய கார்களை வைத்துள்ளார் .இந்நிலையில் தற்போது பகத்பாசில் புதிய பெராரி கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
இதன் விலை மட்டும் ரூ.13.75 கோடி ஆகும். இது போன்ற காரை முகேஷ் அம்பானி, நடிகர் விக்ரம் ஆகியோர் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பகத் பாசில் வாங்கிய சொகுசு காரை மலையாள திரையுலகமே ஆச்சரியத்துடன் பார்க்கிறது என்கிறார்கள்.