இயக்குனராக அறிமுகமாகும் வரலட்சுமி சரத்குமார்!

நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் அவரது சகோதரி பூஜா சரத்குமார் இணைந்து ‘தோசா டைரீஸ்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். தங்களது முதலாவது தயாரிப்பாக உருவாகும் ,“சரஸ்வதி”  என பெயரிடப்பட்டுள்ள  படத்தின்  முதன்மை கதாபத்திரத்தில் நடிப்பதோடு,முதல் முறையாக இயக்குநராகவும்  அறிமுகமாகிறார்.  இப்படத்தில்  வரலட்சுமி சரத்குமாருடன், பிரபல நட்சத்திரங்கள் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவின் சந்திரா ஆகியோர் நடிக்கின்றனர்.இப்படத்தின் ஒளிப்பதிவை ஏ.எம்.எட்வின் சகாய்  மேற்கொள்ள,தமன் எஸ். இசையமைத்து வருகிறார்.