Wednesday, September 23, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

‘மாஸ்க்’ –  விமர்சனம்!

admin by admin
November 24, 2025
in Reviews
423 4
0
591
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

இயக்குநர் வெற்றிமாறன் மேற்பார்வையில், The Show Must Go On & Black Madras Films நிறுவனங்களின் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா, S.P.சொக்கலிங்கம் தயாரித்து, இயக்குநர் வெற்றிமாறனின் உதவியாளரான அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக், இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம், மாஸ்க். இதில் கவின், ஆண்ட்ரியா, பவன், ருஹானி ஷர்மா, சார்லி, ரமேஷ் திலக், கல்லூரி வினோ, அர்ச்சனா சந்தோக், அச்யுத் குமார், சுப்ரமணிய சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

You might also like

‘பீப்’ – விமர்சனம்!

‘சண்டக்காரி’ – விமர்சனம்!

‘கோல்ட் கால்’ (COLD CALL) விமர்சனம்!

R.D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்க, இசையமைத்திருக்கிறார், G.V.பிரகாஷ் குமார்.

கவின், துப்பறியும் நிறுவனம் நடத்தி வருபவர். ஆண்ட்ரியா, சமூக சேவகி போர்வையில் விபசாரத்தொழில் செய்யும் தலைவி. பவன், அடுத்த தேர்தலில் ஆட்சியைப்பிடிக்க முயற்சிக்கும் கட்சித் தலைவர்.

பவன், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக சுமார் 400 கோடி ரூபாயை, ஆண்ட்ரியாவிடம் கொடுத்து விநியோகம் செய்யச்சொல்கிறார்.  ஆண்ட்ரியா, அந்தப் பணத்தை தனது சூப்பர் மார்கெட்டில் பதுக்கி வைக்கிறார். அவர் பதுக்கி வைத்த பணத்தை, ஒரு கும்பல் கொள்ளையடிக்கிறது. இதை கண்டுபிடிக்க, ஆண்ட்ரியாவால் இயமிக்கப்படுகிறார், கவின். இந்நிலையில், கொள்ளையடித்த பணத்தின் ஒரு பகுதி, சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக கவினிடம் கிடைக்கிறது. இது, ஆண்ட்ரியாவிற்கு தெரியவர, கவினின் மகளை ஆண்ட்ரியா கடத்தி வைத்து, பிளாக் மெயில் செய்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான்,  ‘மாஸ்க்’.

கவினுக்கு, எதை பற்றியும் கவலைபடாத, தெனாவட்டான இளைஞன் கதாபாத்திரம். அதை தனக்கு சாதகமாக நன்கு பயண்படுத்தியுள்ளார். இந்தப்படத்தில் அவரது நடிப்பு ரசிக்கக்கூடிய வகையில் மேம்பட்டிருக்கிறது.  மேலும், அவர் பேசும் நக்கலான வசனங்கள், பல காட்சிகளில் கைதட்டல்களை பெற்று வெகுவாக ரசிக்கப்படுகிறது. குறிப்பாக இளைஞர்களால். அவருக்கும் ருஹானி ஷர்மாவுக்குமான காட்சிகளில் கிளுகிளுப்பு. அவருக்கும் ஆண்ட்ரியாவிற்குமான காட்சிகளும் ரசிக்கும்படியே இருக்கிறது.

ஆண்ட்ரியா, சமூக சேவகி நயவஞ்சக நாயகியாக, தனது கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து நடித்திருக்கிறார். கவினின் மகளை கடத்தி வைத்து அவரிடம் காட்டும் வில்லத்தனம் சூப்பர்.  அதேபோல் புவனிடம் காட்டும் கெத்தும் சூப்பர். படம் முழுவதும் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனால், ஒளிப்பதிவாளர் R.D.ராஜசேகர் அவரை ஒரு சில கோணங்களில் படம்பிடித்ததை தவிர்த்திருக்கலாம்.

கவின், அச்யுத்குமார், ருஹானி ஷர்மா மூவரும் ஒரே இடத்தில் சந்தித்து கொள்ளும் காட்சியில் தியேட்டரே சிரிப்பலையில் முழுகுகிறது.

ருஹானி ஷர்மா, கவினையும் ரசிகர்களையும் ஒருசேர கவர்ந்து விடுகிறார்.

பவன், சார்லி, ரமேஷ் திலக், கல்லூரி வினோ, அர்ச்சனா சந்தோக், அச்யுத் குமார், சுப்ரமணிய சிவா ஆகியோரது நடிப்பும் படத்திற்கு பலமாகவே இருக்கிறது. இவர்களில் அர்ச்சனா சந்தோக் நடிப்பு சூப்பர்.

முதல்பாதியில் இருந்த விறுவிறுப்பு, இரண்டாம் பாதியில் இல்லாதது ஏமாற்றம்.

G.V.பிரகாஷ் குமார் இசையமைப்பில், ‘கண்ணுமுழி’ பாடல் இனிமையாக, திருமப கேட்கும் வகையில் இருக்கிறது. பின்னணி இசை இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம். வசனங்களை பின்னணி இசை கேட்கவிடாமல் செய்கிறது. R.D.ராஜசேகர் ஒளிப்பதிவு, இன்னும் கொஞ்சம் பெட்டராக இருந்திருக்கலாம். நெல்சனின் வாய்ஸ் ஓவர், படத்தின் பலவீனம்.

மொத்தத்தில், ‘மாஸ்க்’ ஒரு ஆவேரேஜான படம்!

admin

admin

Related Posts

‘பீப்’ – விமர்சனம்!
Reviews

‘பீப்’ – விமர்சனம்!

by admin
September 20, 2026
‘சண்டக்காரி’ – விமர்சனம்!
Reviews

‘சண்டக்காரி’ – விமர்சனம்!

by admin
September 20, 2026
‘கோல்ட் கால்’ (COLD CALL) விமர்சனம்!
Reviews

‘கோல்ட் கால்’ (COLD CALL) விமர்சனம்!

by admin
September 20, 2026
‘பாரிஸ் கஃபே’ – விமர்சனம்!
Reviews

‘பாரிஸ் கஃபே’ – விமர்சனம்!

by admin
September 19, 2026
சீட்டின் நுனியில் உட்கார வைக்கும், (விமர்சனம்) ‘தி டார்க் ஹெவன்’.
Reviews

சீட்டின் நுனியில் உட்கார வைக்கும், (விமர்சனம்) ‘தி டார்க் ஹெவன்’.

by admin
September 19, 2026

Recent News

ரசிகர்கள் கொடுத்த அங்கீகாரம் !  உற்சாகத்தில் ‘என்ன விலை’ படக்குழு !!

ரசிகர்கள் கொடுத்த அங்கீகாரம் ! உற்சாகத்தில் ‘என்ன விலை’ படக்குழு !!

September 22, 2026
இயக்குநர் ரிமா தாஸின்  “வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் 2”  !

இயக்குநர் ரிமா தாஸின்  “வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் 2”  !

September 22, 2026
ராஜு ஜெயமோகன் இயக்கி, நடிக்கும்  ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ !

ராஜு ஜெயமோகன் இயக்கி, நடிக்கும் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ !

September 22, 2026
‘லவ்வர் பாய்’ படத்தி்ல் இணைந்த  ‘நான் அவனில்லை’  ஜீவன்!

‘லவ்வர் பாய்’ படத்தி்ல் இணைந்த ‘நான் அவனில்லை’ ஜீவன்!

September 22, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?