நூறு ஜென்மம் ஆனாலும்……அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கவுதம் ராம் கார்த்திக்!

நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கௌதம் ராம் கார்த்திக். அப்பாவை போலவே ,சினிமாவில் அறிமுகமாகி நல்ல கதை அம்சம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது, கௌதம், இயக்குநர் சூரிய பிரதாப் .எஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரூட்’ எனும் படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தனது அம்மா ராகினிக்கு,கௌதம் ராம் கார்த்திக் உருக்கமாக பிறந்த நாள் வாழ்த்து கூறி அவரின் சிறுவயது புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
அதில், இந்த உலகத்திலேயே சிறந்த அம்மா நீங்கதான். இன்னும் நூறு ஜென்மம் ஆனாலும், நான் உங்க மகனா பிறக்க வேண்டும். இந்த உலகம் உங்களை சோதிச்சப்போ கூட, ஜாலியா, கூலா இருந்தீங்க, நம்மை எல்லாரும் உடைச்ச போதும் சிரிந்த முகத்தோடு குடும்பத்தை காப்பாற்றினீங்க, ஆபத்து உங்க பையன்களை நெருங்கி வந்தப்போ, ஒரு சிங்கமா மாறுனீங்க, ஒரு அம்மாவா உங்க கடமைய செய்தீங்க, எங்களுக்கு யாரும் இல்லாதப்போ, எங்களுக்கு எந்த திசையும் இல்லாதப்போ, எங்களின் கேப்டன் இல்லாதப்போ, எங்களுக்கு மனசு கஷ்டப்பட்டப்போ, எங்க பக்கத்துல இருந்தது நீங்க நான், நீங்க செஞ்ச தியாகங்களுக்கு எதுவும் ஈடாகாது. அதற்காக, நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என கூறியுள்ளார்.