
பலான வீடு என நினைத்து நல்ல குடும்பத்து வீட்டுக்குள் நுழையும் சூப்பர் சுப்பராயனை போட்டுத்தள்ளுகிறார் கீர்த்தி சுரேஷ். சடலத்தை அப்புறப்படுத்துகிற முயற்சியில் மொத்த குடும்பமும் இறங்க என்ன நடக்கிறது என்பதுதான் ஒன் லைன் .தமிழுக்கு இந்த கதை புதியது இல்லை.
டார்க் காமடி என்றால் லாஜிக் பார்க்கத் தேவையில்லை என்கிற வசதியை ஏற்படுத்திக்கொண்டு கதையை விரிவாக்கம் செய்திருக்கிறார்கள். இயக்குநர் சந்துருவின் இந்த உட்டாலக்கிடி வேலை மேஜிக் செய்திருக்கிறதா ,ஆடியன்ஸ் ரசிக்கிறார்களா ?
கீர்த்தி சுரேஷின் இமேஜ் ஒரு உந்துதலை ஏற்படுத்துவது என்னமோ உண்மைதான்.! ஆனால் ராதிகாவின் இயல்பான நடிப்பினால் கீர்த்தியின் இமேஜ் பின்னால்போய் நின்று விடுகிறது. ஆனாலும் வாய்க்கும் இடங்களில் சிக்சராக அடித்து விளாசி விடுகிறார். ஜே.கே. சந்துருவின் இயக்கம் அந்த இடங்களில் பளிச்சிடுகிறது. கீர்த்தியின் மானேஜரது படமாச்சே! அதனால் ஸ்கோர் பண்ணுவதற்கான வாய்ப்புகளை வாரி வழங்கி இருக்கிறார்.
காவல் துறை அதிகாரியாக வருகிற ஜான் விஜய்க்கும் கீர்த்திக்கும் முன்பகை. அதனால் கொலைப் பழியை அழுத்தமாக கீர்த்தி மீது திணிக்கும் முயற்சி இயல்புடன் இருக்கிறது. ஆனால் நாயகியின் சாதுர்யத்துக்கு முன்பாக எடுபடாமல் போய்விடுகிறது. வில்லன்களை அவர்களது பாணியிலேயே எதிர்கொள்வது ரசனை.!
ராதிகா ஏற்றுள்ள கேரக்டருக்கு வேறு யாராவது பொருந்துவார்களா என்றால் கண்களுக்கு எவரும் தெரியவில்லை. இயல்பான காமடி . எத்தனை வருட அனுபவம் .வாழ்த்துவோம்.
சூப்பர் சுப்பராயன், சுனில், அஜய் கோஷ், இவர்களது அனுபவம் கதையில் பலம்.
கிங்ஸ்லி . சென்ராயன், சுரேஷ் சக்கரவர்த்தி, சங்கர், ராமச்சந்திரன் ஆகியோரும் இருக்கிறார்கள் .உள்ளேன் ஐயா வகையறா .
ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் ,இசை அமைப்பாளர் சான் ரோல்டன் ஆகியோர் இயக்குனரின் சிறப்பான தேர்வு.
ரிவால்வார் ரீட்டா ட்ரீட்டாக இல்லை,!












