“முத்து” படக் காட்சியை வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!
நடிகர் ரஜினிகாந்த் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின் போது, தனக்கு வாழ்த்து தெரிவிக்க வரும் தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் இன்று அதிகாலை முதலே போயஸ் தோட்ட இல்லம் முன்பு ரசிகர்கள் குவிந்தனர் . இதையடுத்து தகவலறிந்த ரஜினிகாந்த், வீட்டிற்கு வெளியே வந்து ரசிகர்களுக்கு கையசைத்தும் கும்பிட்டும் வாழ்த்துக்களை தெரிவித்தார். ரஜினிகாந்தை பார்த்ததும், உற்சாமடைந்த அவரது ரசிகர்கள் தலைவா தலைவா என்றும் புத்தாண்டு வாழ்த்துகள் என்று கூறியும் ஆரவாரம் செய்தனர். இதையடுத்து ரஜினிகாந்தும் அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.
இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்தை முத்து படத்தில் இடம் பெட்ரா ஒரு காட்சியை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
— Rajinikanth (@rajinikanth) January 1, 2026
அதில்மீனாவிடம் ரஜினி கூறும், “நான் எப்பவுமே போற ரூட்டை பத்தி கவலை பட்டதே கிடையாது. ஆண்டவன் மேல பாரத்தை போட்டுட்டு வண்டி எந்த ரூட்ல போகுதோ.. அந்த ரூட்ல, ‘சிவா’-ன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான்..!” என்ற காட்சியை பதிவிட்டுள்ளார்.இக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
— Rajinikanth (@rajinikanth) January 1, 2026