‘ஜனநாயகன்’ பட வழக்கு! தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!!
‘ஜனநாயகன்’ படத்துக்கு சீக்கிரமே சென்சார் பெற்று திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதற்கு கேவிஎன் நிறுவனம் முயற்சித்து வருகிறது. இது சம்பந்தமான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், இன்று விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
மத்திய தணிக்கை,குழுவின் பிடியில் சிக்கித்தவிக்கும் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று காலை நடந்தது. முன்னதாக படக்குழு தொடர்ந்த வழக்கில் ‘ஜனநாயகன்’ படத்துக்கு யு.ஏ. சான்றிதழ் வழங்க சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி பி.டி. உஷா உத்தரவிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து , தணிக்கைக்குழு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து உயர் நீதிமன்றத்தின் அமர்வு நீதிபதிகள் இந்த உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்தனர். இதைதொடர்ந்து கேவி என் தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்த்தில் முறையிட்டது. கடந்த 15ந் தேதி .வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இது குறித்த வழக்குஜனவரி 20-ம் தேதி வர இருப்பதால், சென்னை உயர் நீதிமன்றத்தின் முடிவில் தலையிட மறுத்ததோடு, .இது குறித்து உயர் நீதிமன்றமே இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவச்சவா மற்றும் அருள்முருகன் ஆகியோரின் முன் இன்று காலை 11.30 மணிக்கு விசாரணைக்கு வந்தது. படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சதீஸ் பராசரன், பிரதீப் ராய் ஆஜரானார்கள், சென்சார் போர்டு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜரானார்.முதலாவதாக தணிக்கை குழு தங்களது வாதங்களை முன்வைத்து வாதாடியது. அதில், ஜனநாயகன் படத்தை பார்த்து விட்டு 14 நீக்கிய பின், படத்தை பார்த்துவிட்டு சான்றிதழ் கொடுக்கப்படும் என கூறினோம். இதையடுத்து, நீக்கப்பட்ட படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் தான் படம் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறோம் என்பதை இதை முறையாக, படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு முன்கூட்டியே நாங்கள் அறிவித்து இருக்கிறோம். ஆனால், தயாரிப்பு நிறுவனம் நாங்கள் தணிக்கை அளிக்க தாமதப்படுத்துவதாக வழக்கு தொடுத்து இருப்பதாகவும், எங்களுக்கு பதிலளிக்க கால அவகாசம் வழங்கியிருக்க வேண்டும் என்று தணிக்கை வாரியம் என்றும் தங்களது வாதங்களை முன் வைத்தது.இதையடுத்து தயாரிப்பு நிறுவனம் தங்களது வாதத்தில் , 14 காட்சிகளை நீக்கிவிட்டோம், நீக்கப்பட்ட அந்த காட்சிகளே புகாராக கூறி இருக்கிறார்கள். சென்சார் தொடர்பான அனைத்து வெளிப்படையாக தனித்தன்டையுடன் இருக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது என வாதிட்டது. மேலும், அமேசான் நிறுவனம் படம் எப்போது வெளியாகும் என கேட்கிறது. அவர்கள் எங்களிடம் நஷ்ட ஈடு கேட்டால் என்ன செய்து என வாதிட்டது இதையடுத்து இருதரப்புக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது . இதையடுத்து நீதிபதிகள், சென்சார் போர்டில் யார் படத்தைப் பார்த்தார்கள்? சட்டப்படி படத்தை பார்த்து ஆய்வு செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது? என அடுக்கடுக்கான கேள்விகளை தணிக்கை வாரியத்திடம் எழுப்பியது. இதற்கு பதில் அளித்த தணிக்கை குழு, ‘படத்தைப் பார்த்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்க குழு உள்ளது. அந்த குழுதான் படத்தை பார்த்தது என்றனர். இந்நிலையில், பிற்பகலிலும் வாதங்கள் தொடர்ந்தது.. இருதரப்பு வதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.