ராஷ்மிகா மந்தனா – விஜய் தேவரகொண்டாவுக்கு நாளை திருமணம்?.

கன்னடத் திரையுலகில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘க்ரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்திப்படங்களில் நடித்து வருகிறார்.தெலுங்கில் ‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ படங்களில் ஒன்றாக இணைந்து நடித்த விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா இருவரும் சில வருடங்களாக காதலித்து வருவதாகத் தகவல் வெளியானது.இதனை இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் இல்லை அதே சமயம் மறுக்கவும் இல்லை.இது குறித்து ராஷ்மிகாவிடம் கேள்வி எழுப்பிய போது “திருமணம் பற்றிய தகவலை நான் இப்போது உறுதிப்படுத்தவும், மறுக்கவும் விரும்பவில்லை.அதை பற்றி பேச வேண்டிய நேரம் வந்தால் கண்டிப்பாக தெரிவிப்போம்” என்று கூறியிருந்தார்.இதற்கிடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்ஐதராபாத்தில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாகவும் இருவரது நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது.ஆனால் இது குறித்து இருவரும் காதலை போலவே, நிச்சயதார்த்தம் குறித்தும் வாயைத் திறக்காமல் ரகசியம் காத்து வருகின்றனர்..
அதே சமயம் ராஷ்மிகா விரலில் மின்னிய நிச்சயதார்த்த மோதிரம் நிச்சயதார்த்தம் நடந்ததை சொல்லாமல் சொல்லியது.இதனை தொடர்ந்து, விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா திருமணம் வரும் பிப்ரவரி 26-ந்தேதி ராஜஸ்தானின் உதய்பூரில் நடக்க உள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியது இந்நிலையில், விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி ராஜஸ்தானின் உதய்பூரில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் நாளை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக வீடியோ ஓன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உதய்பூரில் சிட்டி பேலஸில் தான்யா என்பவர் அந்த வீடியோவில், திருமண ஏற்பாடுகள் ஜோராக நடக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.. அதுமட்டுமின்றி அந்த வீடியோவில் இங்கே திருமண ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. விஜய் தேவரகொண்டாவுக்கும், ராஷ்மிகா மந்தனாவுக்கும்தான் இங்கே திருமணம் நடக்கவிருக்கிறது என தான்யா குறிப்பிட்டிருக்கிறார். தற்போது இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாகி வருகிறது.ஆனால் இருவரும் வழக்கம் போல் பதிலளிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.