தமிழக சினிமா ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளுக்காக போஸ்டர் ஒட்டுவது, பேனர் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது உள்பட பலவிதங்களில் தங்கள் அன்பை வெறித்தனமாக வெளிக்காட்டுவது ஊமை சினிமா காலத்தில் இருந்து நடந்து வருவது வாடிக்கை தான். ஒருசிலர் கொஞ்சம் மேலே போய், கோவில் கட்டி கும்பிடுவதும் உண்டு. கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகை குஷ்புவுக்கு மதுரையில் கோவில் கட்டியதும் எல்லோருக்கும் தெரிந்தது தான்.இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நடிகர் விஜய்க்கு அவரது ரசிகர்கள் சிலை வைத்து அதற்கு தீபாராதனை, பிரார்த்தனை ஆகியவைகளை செய்து வருகின்றனராம்.