ராஷ்மிகா மந்தனா- விஜய் தேவரகொண்டா திருமணம்: இன்று காலை பாரம்பரிய முறைப்படி நடந்தது

தென்னிந்தியத் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் திருமணம் இன்று காலை 10:10 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரிலிருந்து 25 கி.மீ தொலைவில் ஆரவல்லி மலைகளின் மடியில் அமைந்துள்ள ஐடிசி மெமென்டோஸ் ஓட்டலில் தெலுங்கு பாரம்பரிய முறைப்படி நடந்தது. விஜய் தேவரகொண்டா ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்.ராஷ்மிகா கர்நாடக மாநிலம் (கூர்க்) கொடகு மாவட்டத்தை சேர்ந்தவர் மாலையில் ராஷ்மிகாவின் குடும்ப வழக்கத்தின் படி கொடவா பாரம்பரியமுறைப்படி சூரிய அஸ்தமன திருமணம் நடக்கிறது.இதன் மூலம் ஒரே நாளில் 2 விதமான சடங்குகளுடன் 2 முறை திருமணம் செய்து கொள்கின்றனர். காலையில் தெலுங்கு பாரம்பரியப்படி நடந்து முடிந்த திருமணம், மாலையில் கொடவா பாரம்பரியப்படியும் நடக்கிறது.ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.விஜய் தேவரகொண்டாவின் தாய் மாதவி, பாரம்பரியத்தின்படி மருமகள் ராஷ்மிகாவுக்கு பரம்பரை வளையல்களை பரிசாக வழங்கினார். மாமியாரிடம் இருந்து கிடைத்த பரிசால் ராஷ்மிகா மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்.
ராஷ்மிகா மற்றும் விஜய்யின் திருமணத்தின் முதல் நாளில் விருந்தினர்கள் முதலில் வாட்டர் வாலிபால் விளையாடினர். இரண்டாம் நாள் ‘விரோஷ்’ பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. முன்னதாக ஹல்தி மற்றும் மெஹந்தி சடங்கு நடந்தது.சங்கீத் விழாவில் விஜய் தேவரகொண்டாவின் தாயார் ராஷ்மிகாவுக்கு ஒரு மிக விலையுயர்ந்த பரிசை வழங்கினார். 23ஆம் தேதி மாலை கேண்டில் லைட் டின்னரில் ஜப்பானிய வகை உணவுகள் பரிமாறப்பட்டன. மேலும் நீச்சல் குளத்திலேயே வைத்து பார்ட்டியெல்லாம் கொடுத்து அசத்தினார்கள். தொடர்ந்து குடும்பத்தினரிடையே ‘விரோஷ்’ என்ற பெயரில் கிரிக்கெட் போட்டியையும் ஜாலியாக நடத்தினார்கள்.24ஆம் தேதி ஹல்தி கொண்டாட்டமும், மெஹந்தி கொண்டாட்டமும் நடந்தது. அப்போது ராஷ்மிகா கையில் ரொம்பவே அழகான மெஹந்தி போடப்பட்டது. அதற்கு பிறகு நேற்று இரவு ஐடிசி மெமண்டோஸில் இரண்டு பேரின் சங்கீத் நிகழ்ச்சி நடந்தது. அதில் விஜய் தேவரகொண்டா கருப்பு கோட்டும், ராஷ்மிகா மந்தனா லைட் சந்தன நிறத்தில் கவுனும் அணிந்து வந்து பலரையும் கவர்ந்தனர்’. நிகழ்ச்சியின் போது ஒருகட்டத்தில், விஜய் தேவரகொண்டா,ராஷ்மிகா ஆகியோரின் இரண்டு அம்மாக்களும் இசைக்கப்பட்ட இசைக்கு தகுந்தமாதிரி சூப்பராக நடனமாடினர். அவர்களுடன் சேர்ந்து உறவினர்களும் நடனம் ஆடினார்கள்.மேலும் விஜயதேவரகொண்டா ராஷ்மிகா இருவரும் இணைந்து புஷ்பா-2 படத்தில் இடம்பெற்று இருந்த பாடல் நடனம் ஆடினர். திருமண நிகழ்வில் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகள் சடங்குகள் அரங்கேறின. ராஷ்மிகாவின் தங்கை ஷிமான் மந்தனா அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் முக்கிய நபராக வலம் வந்தார். ராஷ்மிகாவை விட 16 வயது இளையவரான ஷிமான், தனது அக்காவின் திருமணத்தில் வட இந்திய முறைப்படி ‘ஜூதா சுப்பாய்’ (செருப்பு திருடும் சடங்கு) நிகழ்வில் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றார்.மணமகனான விஜய் தேவரகொண்டாவின் செருப்புகளைத் திருடி மறைத்து வைத்துவிட்டு, அதற்கு பதிலாக விஜய்யிடமிருந்து ஒரு விலையுயர்ந்த பரிசை பெற்றது விருந்தினர்களை பெரிய அளவில் கவர்ந்தது.வரும் மார்ச் 4ம் தேதி , ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோரது பிரம்மாண்டதிருமண வரவேற்பு நிகழ்வு ஐதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் நடைபெறுகிறது இதில், சினிமா, மற்றும் அரசியல் பிரபலங்கள் திரளாக பங்கேற்பார்கள்என கூறப்படுகிறது. முன்னதாக இவர்களது திருமணத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் தனது வாழ்த்தில், “ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணத்துக்கு அழைக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்தத் தருணத்தில் இரண்டு பேரின் குடும்பத்துக்கும் வாழ்த்துகள். விஜய் மற்றும் ராஷ்மிகா அவர்களது வாழ்க்கையில் புதிய மற்றும் அழகான அத்தியாயத்தை தொடங்குகிறார்கள். இது அவர்களது வாழ்க்கையில் ஒரு தெய்வீக கதையின் அத்தியாயம். வெள்ளித்திரையில் அவர்கள் உருவாக்கிய மாயாஜாலத்தை விஞ்சும் என நம்புகிறேன். சிந்தனையுடனும், அன்புடனும் இரண்டு பேரும் அவர்கள் பொறுப்புகளை பகிர்ந்துகொள்ளட்டும். தம்பதியினருக்கு எனது வாழ்த்தும், ஆசீர்வாதமும்” என குறிப்பிட்டுள்ளார்.