‘தெறி’ படத்தை அடுத்து மீண்டும் விஜய் நடிப்பில், அட்லீ விஜய் 61 படத்தை இயக்கி வருகிறார் இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னை, மதுரையில் படமாக்கப்பட்ட நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது,ஐரோப்பாவில் நடந்து வருகிறது. இப்படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.இந்நிலையில்,
விஜய் மீண்டும் அட்லீக்கே மூன்றாவது முறையாக கால்ஷீட் கொடுத்திருப்பதாக கூறபடுகிறது. அட்லீ படத்தை முடித்துவிட்டு அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கும் விஜய், அடுத்து நடிக்கும் படத்தில் பல இயக்குநர்களின் பெயர்கள் அடிப்பட்ட நிலையில், மீண்டும் அட்லீக்கே தன் படத்தை இயக்கும் வாய்ப்பை தந்திருக்கிறாராம் விஜய்.