Tuesday, May 5, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

விஜய்யின் ‘த.வெ.க’ அமோக வெற்றி! திரையுலகினர் வாழ்த்து!!

admin by admin
May 5, 2026
in News
421 4
0
589
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 109 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர்.மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இந்நிலையில், போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் விஜய் அபார வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து தமிழகத்தில் அவர் ஆட்சி அமைக்க உள்ள நிலையில்,
தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

You might also like

மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநரின் அடுத்த படைப்பு!

திடீர்னு கர்ப்பம்….சினிமாவை விட வேண்டியதா போச்சு …. -‘வாளமீனு’ மாளவிகா வருத்தம்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் இன்று வேலைநிறுத்தம்!

நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
“மக்களின் அன்பும் ஆதரவும் கிடைப்பது வரம். நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது.தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கவிருக்கும் அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்..

நடிகர் சிரஞ்சீவி,
“உங்கள் முதல் தேர்தலில் நீங்கள் பெற்றுள்ள இந்த மிகச்சிறந்த மற்றும் தகுதியான வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.நீங்கள் தொடர்ந்து உங்கள் அசைக்க முடியாத ஆர்வம் மற்றும் நோக்கத்துடன் மக்களை வழிநடத்தவும், ஊக்கப்படுத்தவும், சேவை செய்யவும் வேண்டுகிறேன். தமிழ்நாடு மற்றும் தமிழக மக்களுக்கான உங்கள் பொதுப்பணி சிறக்க எனது நல்வாழ்த்துகள்” எனப் பதிவிட்டிருக்கிறார்.

நடிகர் மகேஷ் பாபு, “புதிய சாதனைகளைப் படைத்து, பிரமிக்கத்தக்க வெற்றியைப் பெற்றுள்ள விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

இன்றைய முடிவு மக்கள் உங்கள் மீது வைத்துள்ள அபார நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. இந்த வெற்றி தமிழகத்தின் அர்த்தமுள்ள முன்னேற்றமாக மாறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” எனப் பதிவிட்டிருக்கிறார்.

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை திரிஷா, திருப்பதி கோவிலுக்கு சென்று வழிபட்டார். பின்னர் அங்கிருந்து நேராக விஜய் வீட்டுக்கு சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து திருப்பதி கோவிலின் பிரசாதத்தையும் வழங்கினார். நடிகை வரலட்சுமி சரத்குமார்: ‘ஒரு விரல் புரட்சி’ எனக் குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் வாழ்த்துப் பதிவிட்டுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன், “முதல் தேர்தலிலேயே மக்கள் மத்தியில் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதற்கு வாழ்த்துகள். நீங்கள் திரைத்துறையைச் சேர்ந்தவர் என்பதால் கூடுதல் மகிழ்ச்சி. என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் நடிகர் .ஜி.வி. பிரகாஷ் குமார்: விஜய் மற்றும் தவெக-வின் வெற்றிக்கு தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். நடிகைகள் மஞ்சிமா மோகன்: இந்த மாபெரும் வெற்றியை கண்டு மகிழ்ச்சியடைவதாகவும், @actorvijay சாருக்கு வாழ்த்துகள் என்றும் பதிவிட்டுள்ளார். மீனா: தமிழக வெற்றிக் கழகத் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு: “THE GREATEST OF ALL TIME” எனக் குறிப்பிட்டு, விஜய்யின் கொடியைப் பகிர்ந்து வாழ்த்தியுள்ளார்.

பாலிவுட் நடிகர் ‘டைகர் ஷெராஃப்’: “விஜய், மக்கள் உங்கள் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் நீங்கள்தான் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. உங்கள் தலைமையில் தமிழ்நாடு அடுத்த கட்டத்திற்கு முன்னேறட்டும்,” என்று எக்ஸ் பக்கத்தில் வாழ்த்தியுள்ளார்.ஏற்கனவே ஜான் மகேந்திரன், நடிகை ஏஜென்ட் டீனா உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

நடிகர் விக்ரம்” வாழ்த்துகள் நண்பா இன்று வரலாறு படைத்தீர்கள்” என விஜயுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, “வரலாறு காணாத சாதனை படைத்து கொண்டிருக்கும் விஜய்க்கு வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

காஜல் அகர்வால், “நான் ஒரு தடவ சொன்னா, நூறு தடவ சொன்னா மாறி , இன்று, மக்கள் முழு நம்பிக்கையுடன் அதை மீண்டும் எதிரொலித்துள்ளனர். விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், இந்த அற்புதமான மற்றும் மகத்தான வெற்றிக்கு வாழ்த்துக்கள்! இந்தத் தருணம் உங்கள் தொலைநோக்குப் பார்வைக்கும், உங்கள் விடாமுயற்சிக்கும், மக்கள் உங்கள் மீது வைத்துள்ள அசைக்க முடியாத அன்புக்கும் ஒரு உண்மையான சான்றாகும். தமிழக மக்கள் உரக்க, தெளிவாக, மிகுந்த பெருமையுடன் தங்கள் தீர்ப்பை வழங்கியுள்ளனர். இது வெறும் வெற்றி மட்டுமல்ல, கோடிக்கணக்கான மக்களுடன் ஏற்பட்ட ஆழமான, வலிமையான பிணைப்பின் கொண்டாட்டமாகும். இந்த எழுச்சியூட்டும் புதிய அத்தியாயத்தில் நீங்கள் அடியெடுத்து வைக்கும்போது, ​​உங்களுக்கு மிகுந்த வலிமையும் வெற்றியும் கிடைக்க வாழ்த்துகிறோம். பலரும் எதிர்பார்க்கும் மாற்றத்தை நீங்கள் கொண்டு வருவீர்களாக. இந்த மகத்தான சாதனைக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள்!” எனக் கூறியுள்ளார்.

சிபி சத்தியராஜ் தனது எக்ஸ் தளத்தில், “கூட்டம் ஒட்டா மாறாது; -மாறிடுச்சு! ஒட்டு சீட்டா மாறாது -மாறிடுச்சு! “நடிகன் நாடாள முடியாது; -ஆளப்போகிறார். அவர் திரும்ப நடிக்க போய் விடுவார் -வாய்ப்பில்லை ராஜா. அவருக்கு அரசியல பத்தி என்ன தெரியும் ?; -பாக்க தானே போறீங்க ;விஜய் இவராக முடியாது ;விஜய் அவராக முடியாது”.. -எவராலும் விஜய் ஆக முடியாது! என பதிவிட்டுள்ளார்.

admin

admin

Related Posts

மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநரின் அடுத்த படைப்பு!
News

மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநரின் அடுத்த படைப்பு!

by admin
May 4, 2026
திடீர்னு கர்ப்பம்….சினிமாவை விட வேண்டியதா  போச்சு …. -‘வாளமீனு’  மாளவிகா வருத்தம்!
News

திடீர்னு கர்ப்பம்….சினிமாவை விட வேண்டியதா போச்சு …. -‘வாளமீனு’ மாளவிகா வருத்தம்!

by admin
May 3, 2026
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் இன்று வேலைநிறுத்தம்!
News

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் இன்று வேலைநிறுத்தம்!

by admin
May 2, 2026
வாகீசன் ராசையாவின் ‘தமிழ் கிறுக்கன்’ !
News

வாகீசன் ராசையாவின் ‘தமிழ் கிறுக்கன்’ !

by admin
May 2, 2026
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற கருணாஸின் ‘என்ன விலை’!
News

சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற கருணாஸின் ‘என்ன விலை’!

by admin
May 2, 2026

Recent News

விஜய்யின் ‘த.வெ.க’  அமோக வெற்றி! திரையுலகினர் வாழ்த்து!!

விஜய்யின் ‘த.வெ.க’ அமோக வெற்றி! திரையுலகினர் வாழ்த்து!!

May 5, 2026
திடீர்னு கர்ப்பம்….சினிமாவை விட வேண்டியதா  போச்சு …. -‘வாளமீனு’  மாளவிகா வருத்தம்!

திடீர்னு கர்ப்பம்….சினிமாவை விட வேண்டியதா போச்சு …. -‘வாளமீனு’ மாளவிகா வருத்தம்!

May 3, 2026
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் இன்று வேலைநிறுத்தம்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் இன்று வேலைநிறுத்தம்!

May 2, 2026
வாகீசன் ராசையாவின் ‘தமிழ் கிறுக்கன்’ !

வாகீசன் ராசையாவின் ‘தமிழ் கிறுக்கன்’ !

May 2, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?