லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகி, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ‘DC’ (தேவதாஸ் சந்திரா) திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய லாபகரமான வெற்றியைப் பெற்று சாதனை படைத்து வருகிறது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் நடிப்பில் உருவான இந்த ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம், சுமார் ₹25 கோடி என்ற மிகக் குறைந்த பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டு எடுக்கப்பட்டது.
பெரிய நட்சத்திர பட்டாளம் இல்லாத போதிலும், லோகேஷ் கனகராஜின் முதல் நடிப்பு முயற்சி மற்றும் அனிருத் ரவிச்சந்தரின் அதிரடி பின்னணி இசை ஆகியவை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்து ரசிகர்களைத் திரையரங்கிற்கு ஈர்த்துள்ளன.
‘DC’ (தேவதாஸ் சந்திரா) திரைப்படம் படம் வெளியான முதல் நாளில் ₹4.40 கோடியை வசூலித்த நிலையில், நேர்மறையான விமர்சனங்களால் சனிக்கிழமை ₹7.00 கோடியாகவும், ஞாயிற்றுக்கிழமை ₹9.55 கோடியாகவும் வசூல் அதிகரித்தது. வார நாளான திங்கட்கிழமையிலும் சரிவைச் சந்திக்காமல் நிலையாக ₹5.70 கோடியை ஈட்டியது. இதன் மூலம் வெறும் 4 நாட்களில் இந்தியாவின் மொத்த நிகர வசூல் ₹26.70 கோடியை எட்டியுள்ளது.
உலகளாவிய ரீதியில் இந்திய ஒட்டுமொத்த வசூல் ₹30.65 கோடியாகவும், வெளிநாட்டு வசூல் ₹13.25 கோடியாகவும் உள்ள நிலையில், படத்தின் ஒட்டுமொத்த உலகளாவிய வசூல் ₹43.90 கோடியாக உயர்ந்துள்ளது. தியேட்டர் உரிமையாளர்களின் கூற்றுப்படி தற்போது இந்த வசூல் ₹50 கோடியை நோக்கித் தீவிரமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது .இந்த பாக்ஸ் ஆபீஸ் வசூல் மூலம், படம் வெளியான 4 நாட்களிலேயே தனது மொத்த பட்ஜெட்டான ₹25 கோடியை விட அதிக தொகையை இந்தியாவில் மட்டும் வசூலித்து, தயாரிப்பாளர்களை முழுமையாகப் பாதுகாப்பான லாபப் பகுதிக்குள் கொண்டு சேர்த்துள்ளது.
திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தங்களின் முதலீட்டை எடுத்துவிட்டு லாபத்தைப் பார்க்கத் தொடங்கியுள்ள நிலையில், இப்படத்தின் டிஜிட்டல் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமைகளும் சன் குழுமத்திடமே இருப்பதால், சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இது 100% க்கும் அதிகமான லாபத்தை (Return on Investment) ஈட்டித் தந்துள்ளது.
இதன் மூலம் ‘DC’ திரைப்படம் 2026-ஆம் ஆண்டின் மிகப்பெரிய ‘பாக்ஸ் ஆபீஸ் ஹிட்’ படங்களில் ஒன்றாகத் தடம் பதித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.












