தமிழ் திரையுலகில் இன்றைய இளைஞர்களின் பல்ஸ்-ஐ பிடிக்கும் விதமாக, முற்றிலும் புதிய வண்ணத்தில் ஒரு ‘ஜென்-ஸி’ (Gen-Z) ஃபேமிலி எண்டர்டெய்னர் திரைப்படத்தைக் கையில் எடுத்துள்ளது பெஸ்டி பிக்சர்ஸ் நிறுவனம். காதல், நட்பு, காமெடி மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று (ஆகஸ்ட் 24) சென்னையில் உள்ள ஸ்டுடியோவில் பிரம்மாண்ட பூஜையுடன் ஆன்பிரேக் ஆனது.
விமர்சன ரீதியாகப் பாராட்டுகளைப் பெற்ற ‘பொதுநலன்கருதி’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சீயோன் ராஜா, தனது அடுத்த படைப்பான ‘சமூகவிரோதி’ ரிலீஸிற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் போதே, இந்த புதிய படத்தை இயக்கத் தொடங்கியுள்ளார்.டாக்டர் எஸ். கார்த்திகேயன் இத்திரைப்படத்தின் கதை, வசனத்தை எழுதித் தயாரிப்பதுடன், பெஸ்டி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தந்து கிரியேட்டிவ் பங்களிப்பை வழங்குகிறார். கார்த்திகேயன் உருவாக்கியுள்ள கதாபாத்திரங்களின் உலகத்தை, தந்து ரசனையான திரைக்கதை மற்றும் இயக்கத்தின் மூலம் திரைக்குக் கொண்டு வருகிறார் இயக்குநர் சீயோன் ராஜா.

நம்மைச் சுற்றி தினமும் நடக்கும் சாதாரண விஷயங்கள், சூழ்நிலைகள் மாறும்போது எப்படி செம கலாட்டாவாக மாறுகிறது என்பதுதான் படத்தின் ஒன்லைன். சிரிப்புக்கு நடுவே காதல், கலாட்டாவுக்கு நடுவே பாசம் எனப் பக்காவான ‘ஃபீல்-குட்’ மூவியாக இது தயாராகிறது.இப்படத்தில் ரோஷன் மற்றும் சபரி கணேஷ் கதாநாயகர்களாகவும், அஸ்மிதா மற்றும் வர்ணா கதாநாயகிகளாகவும் புது முகங்களாகக் களம் இறங்குகின்றனர். இவர்களுடன் ‘பருத்திவீரன்’ சுஜாதா அம்மாவாகவும், ரமேஷ் கண்ணா அப்பாவாகவும் நடிக்கின்றனர்.இப்படத்தின் ஹைலைட்டே, தமிழ் சினிமாவின் எவர்கிரீன் காமெடி கிங்ஸ் இதில் இணைந்திருப்பதுதான். அஸ்மிதா (மஸ்காரா), கஞ்சா கருப்பு, ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன், மதுரை காளையன் மற்றும் சிங்கமுத்து ஆகியோர் இணைந்து தங்களது அக்மார்க் காமெடி டைமிங்கால் தியேட்டரை அதிரவைக்கத் தயாராகி வருகின்றனர்.

வினோத் பெருமாள் ஒளிப்பதிவிலும், விக்னேஷ் ராஜா இசையிலும், ஜெயா முருகன் கலை இயக்கத்திலும் உருவாகும் இத்திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு தற்பொழுது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. ஆடை வடிவமைப்பை Beaulet கவனிக்க, மக்கள் தொடர்பாளராகப் பரணி அழகிரி (PRO) பணியாற்றுகிறார்.இளமை, குடும்பம், காதல் என அனைத்து அம்சங்களையும் குடும்பத்தோடு கொண்டாடும் வகையில், தற்பொழுது படக்குழுவினர் முழுமையான ‘ஃபன் மோடில்’ பரபரப்பாகப் பணியாற்றி வருகின்றனர். இப்படத்தின் அதிகாரப்பூர்வத் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் விரைவில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.












