மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், துருவ் விக்ரம் புதியதொரு அதிரடிப் பரிமாணத்தில் நடிக்கும் ‘ஜாக்கி’ (Jackie) திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
பல்வேறு மொழிகளில் படங்களைத் தயாரித்து வரும் தயாரிப்பாளர்களான நவீன் எர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர், தங்களது அடுத்த தமிழ் திரைப்படத்தை அறிவித்துள்ளனர். இயக்குநர் கரன் அரவிந்த் குமார் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், காமிக்ஸ் (Comic-book theme) பாணியிலான பிரத்யேக வடிவமைப்புடன் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த போஸ்டரில் துருவ் விக்ரம் மிகவும் ஆக்ரோஷமான மற்றும் ஸ்டைலிஷான தோற்றத்தில் மிரட்டலாகக் காட்சியளிக்கிறார். அவரது கரடு முரடான (Rugged) தோற்றமும், வீரிய பார்வையும், நீட்டியிருக்கும் முஷ்டியும் இப்படம் ஒரு பக்கா அதிரடி ஆக்ஷன் என்டர்டெய்னராக இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகின்றன.
ஜாக்கி படத்தின் போஸ்டரில் இடம்பெற்றுள்ள ‘நோ ரீடேக்ஸ் அலவ்ட்’ (No Retakes Allowed) என்ற சுவாரசியமான டேக்லைன், துருவ் விக்ரமின் ஆக்ரோஷத் தோற்றத்திற்கு மேலும் வலுசேர்ப்பதோடு, கதைக்களத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
தொழில்நுட்பக் குழுவை பொறுத்தவரை, படத்திற்குச் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, விக்கி ஒளிப்பதிவு பணிகளையும், ஜெயசூர்யா படத்தொகுப்புப் பணிகளையும் மேற்கொள்கின்றனர். விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளை விக்ரம் மோர் வடிவமைக்க உள்ளார்.
துருவ் விக்ரமின் ஒரு ஸ்டைலிஷான ஆக்ஷன் படமாக உருவாகவிருக்கும் ‘ஜாக்கி’ படத்தின் இந்த ஃபர்ஸ்ட் லுக் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது .












